முகப்பு
தற்போதைய செய்திகள்

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இரு கணக்கு அதிகாரிகள் பொறுப்பேற்பு!

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர உயர்கல்வித்துறை அமைச்சர் தமிழக சட்டப்பேரவையில் திங்கள்கிழமை சட்டதிருத்த மசோதா கொண்டு வந்தார். இந்நிலையில் தமிழகஅரசால்

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:19 AM
பகிர்:

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழகஅரசால் நியமிக்கப்பட்ட இரு கணக்கு அதிகாரிகள் பொறுப்பேற்றனர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர உயர்கல்வித்துறை அமைச்சர் தமிழக சட்டப்பேரவையில் திங்கள்கிழமை சட்டதிருத்த மசோதா கொண்டு வந்தார். இந்நிலையில் தமிழகஅரசால் நியமிக்கப்பட்டுள்ள முதன்மை கணக்கு அதிகாரி ரவிச்சந்திரன், கணக்கு அதிகாரியாக சீனுவாசன் ஆகியோர் இன்று பொறுப்பேற்றனர். முதன்மை கணக்கு அதிகாரி ரவிச்சந்திரன், திருவள்ளூர் மாவட்ட கருவூல அதிகாரியாகவும், கணக்கு அதிகாரி சீனுவாசன் கடலூர் மாவட்ட ஆட்சியரின் கணக்கு பிரிவு நேர்முக உதவியாளராக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →