அண்ணாமலைப் பல்கலைக்கழக பதிவாளர் பணிமாற்றம்!
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசு கட்டுபாட்டின் கீழ் கொண்டு வர தமிழக சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் சட்டதிருத்த மசோதாவை திங்கள்கிழமை தாக்கல் செய்தார். இதனையடுத்து
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பதிவாளர் ஆர்.மீனாட்சிசுந்தரம் பணிமாற்றம் செய்யப்பட்டார்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசு கட்டுபாட்டின் கீழ் கொண்டு வர தமிழக சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் சட்டதிருத்த மசோதாவை திங்கள்கிழமை தாக்கல் செய்தார். இதனையடுத்து அண்ணாமலைப் பல்கலைக்கழக பதிவாளராக பதவி வகித்து வந்த ஆர்.மீனாட்சிசுந்தரத்தின் வயது 58 முடிவுற்றதால் பதிவாளர் பதவியிலிருந்து அவரை விடுவித்து, வணிகவியல் பேராசிரியராக பணி மாற்றம் செய்து தமிழக உயர்கல்வித்துறை நேற்று(திங்கள்கிழமை) மாலை உத்தரவு பிறப்பித்தது. அதன் பேரில் ஆர்.மீனாட்சிசுந்தரம் வணிகவியல் துறை பேராசிரியராக பொறுப்பேற்றார்.