சிதம்பரம் அருகே ஊருக்குள் புகுந்து கிணற்றில் விழுந்த 12 அடி நீள முதலை!
சிதம்பரம் அருகே குமராட்சி அகரநல்லூர் கிராமத்தில் ஜெயபால் என்பவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் இன்று காலை பழைய கொள்ளிடம் ஆற்றிலிருந்து ஊருக்குள் புகுந்த 12அடி நீள முதலை தவறி விழுந்நது.
சிதம்பரம் அருகே ஊருக்குள் புகுந்து கிணற்றில் விழுந்த 12 அடி நீள முதலையை வனத்துறையினர், தீயணைப்புத்துறையினர் இணைந்து மீட்டனர்.
சிதம்பரம் அருகே குமராட்சி அகரநல்லூர் கிராமத்தில் ஜெயபால் என்பவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் இன்று காலை பழைய கொள்ளிடம் ஆற்றிலிருந்து ஊருக்குள் புகுந்த 12அடி நீள முதலை தவறி விழுந்நது. இதுகுறித்து ஊர்மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனவர் மணி தலைமையில் வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர், கடலூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பூனம்சந்த் ஆகியோர் அக்கிராமத்திற்கு சென்று 12 அடி நீள முதலையை மீட்டு, சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி குடிநீர் தேக்க குளத்தில் கொண்டு விட்டனர்.