முகப்பு
தற்போதைய செய்திகள்

கொலை முயற்சி வழக்கில் அண்ணாமலைநகர் பேரூராட்சி தலைவரின் கணவர் உள்ளிட்ட 4 பேர் கைது!

சிதம்பரம் அண்ணாமலைநகர் சி.கொத்தங்குடிதோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தையன் (42). அதிமுக மாவட்ட மாணவரணி செயலாளராக உள்ள இவருக்கும் அப்பகுதியில் வசிக்கும் அதிமுகவைச் சேர்ந்த அண்ணாமலைநகர்

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:20 AM
பகிர்:

அதிமுகவைச் சேர்ந்த சிதம்பரம் அண்ணாமலைநகர் பேரூராட்சி தலைவரின் கணவர் உள்ளிட்ட 4 பேரை கொலைமுயற்சி வழக்கின் கீழ் போலீஸார் கைது செய்தனர்.

சிதம்பரம் அண்ணாமலைநகர் சி.கொத்தங்குடிதோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தையன் (42). அதிமுக மாவட்ட மாணவரணி செயலாளராக உள்ள இவருக்கும் அப்பகுதியில் வசிக்கும் அதிமுகவைச் சேர்ந்த அண்ணாமலைநகர் பேரூராட்சி தலைவர் கீதாவின் கணவர் கலியமூர்த்திக்கும் முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கலியமூர்த்தி (42), செந்தில் (30), ராம்குமார் (33), தமிழரசன் (28) ஆகிய நால்வரும் செவ்வாய்க்கிழமை இரவு முத்தையன் வீட்டிற்குள் நுழைந்து முத்தையன் வீட்டில் இல்லாததால், அவரது மனைவியை ஆபாசமாக திட்டி, மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து முத்தையன் கொடுத்த புகாரின் பேரில் அண்ணாமலைநகர் போலீஸார் வழக்குப் பதிந்து கலியமூர்த்தி உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →