முகப்பு
தற்போதைய செய்திகள்

துறைமுகத்தால் சுற்றுச்சூழல் வெகுவாக பாதிப்பு : புதுவை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மீது மார்க்சிஸ்ட் கட்சி புகார்

 நிலக்கரி  இறக்குமதி, ஏற்றுமதி செய்யும் காரைக்கால் தனியார் துறைமுகத்தால் சுற்றுச்சூழல் வெகுவாக பாதித்துள்ளது. புதுவை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இதில் போதிய அக்கறை மக்களின் நலனை கருத்தில்கொண்டு எடுக்கவில்லையென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புகார் கூறியுள்ளது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:21 AM
பகிர்:

 நிலக்கரி  இறக்குமதி, ஏற்றுமதி செய்யும் காரைக்கால் தனியார் துறைமுகத்தால் சுற்றுச்சூழல் வெகுவாக பாதித்துள்ளது. புதுவை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இதில் போதிய அக்கறை மக்களின் நலனை கருத்தில்கொண்டு எடுக்கவில்லையென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புகார் கூறியுள்ளது.

இதுகுறித்து இக்கட்சியி்ன் வட்ட செயலர் அ.வின்சென்ட் வியாழக்கிழமை கூறியது :   மக்களுக்கு வெகுவாக பாதிப்பு ஏற்படுவதால் சென்னை உயர்நீதிமன்றம், சென்னை துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதிக்கு தடை விதித்தது. இதே நிலைபாட்டை காரைக்கால் துறைமுகத்தின் மீதும் எடுக்கவேண்டுமென கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. காரைக்கால் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதியே பிரதானமாக இருக்கிறது. உரிய விதிகளின்படி அவை ஸ்டாக் செய்வதும், இறக்குமதி, ஏற்றுமதி செய்வதும் கிடையாது. இதனால் சுற்றுவட்டார மக்கள் உடல் ரீதியாக பாதிக்கின்றனர். மலைபோல் குவிக்கப்பட்டுவரும் நிலக்கரி, உரிய முறையில் தண்ணீர் ஊற்றி, காற்றில் பரவாத வகையில் பாதுகாக்கப்படுவதில்லை. ஆங்காங்கே நிலக்கரி குவியலில் தீ கிளம்புகிறது. இப்பகுதி சுற்றுவட்டார  மக்களின் ஆயுள் காலம் கொஞ்சம் கொஞ்சமாக குறைகிறது.

பொதுநலன் கருதியே நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் புதுவை மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு, துறைமுகம் குறித்த புகார் தெரிவிக்கப்பட்டது. இப்புகார் குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என கட்சி சார்பில் வினவியபோது, ஆக. 3-ம் தேதி 2012-ல் இவ்வாரியம் மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலருக்கு அனுப்பிய கடித விவரத்தை, 2013- மார்ச்.4-ம் தேதி எங்களுக்கு அனுப்பியுள்ளது.

துறைமுகத்தை ஆய்வு செய்ததாகவும், நிலக்கரி இறக்குமதி, ஏற்றுமதியில் தானியங்கி முறை பெல்ட் கன்வேயர் சிஸ்டம் கடைபிடிக்கப்படுவதில்லை. 2 நாள்கள் தங்கியிருந்து துறைமுக வளாகத்தில், காற்று மாசடைவதை ஆய்வு செய்தபோது, 100 மைக்ரோ கிராம் கியூபிக் மீட்டரைக் கடந்து காற்று நிலக்கரியால் மாசடைந்துள்ளது தெரியவந்ததாக கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து தன்னிலை விளக்கம் கேட்டு துறைமுக நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துறைமுகத்தில் இரு தவறுகள் கண்டறிந்த நிலையில், நடவடிக்கை எடுக்கவேண்டிய இத்துறை தாமதமாக எங்கள் புகார் மீது  ஆய்வு நடத்தியதும், தவறு மீது நடவடிக்கையே எடுக்காமல் இருந்துள்ளதும் தெரியவருகிறது. இவ்விரு புகார்கள் கண்டறியப்பட்டவுடன், துறைமுகத்தை மூடுவதற்கு உரிய நடவடிக்கையை துறையே எடுக்கமுடியும். ஆனால் துறைமுகத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் எடுத்துள்ளது வேதனைக்குரியதாக உள்ளது.

உடனடியாக துறைமுக வளாகத்தில் வாரியத்தின் சார்பில் காற்று மாசடைவதை கண்காணிக்கும் கருவி பொருத்தி, உரிய மையம் அங்கேயே செயல்படவேண்டும். தற்போது வெயில் காலமாகவும், ஆடிக் காற்று வீசும் காலம் வருவதாலும், நிலக்கரியால் மக்களுக்கு பாதிப்பு பெருக வாய்ப்புள்ளது. துறைமுகத்தால் மக்களுக்கோ, புதுவை அரசுக்கோ பெரிய பயனேதும் இல்லை. எனவே மக்களின் பாதிப்பை கருத்தில்கொண்டு, வழக்கை விரைந்து விசாரித்து தீர்ப்பு வழங்க நீதிமன்றத்தை கட்சி அணுகவுள்ளது என்றார் வின்சென்ட்.

முழு கட்டுரையைப் படிக்க →