பசுந்தாள் உரபயிர் விதைகள் மானியத்தில் விநியோகம்
பரங்கிப்பேட்டை வட்டாரத்தில் பசுந்தாள் உர பயிரான தக்கை பூண்டு விதைகள் தேசிய வேளாண்மை அபிவிருந்தி திட்டத்தின் கீழ், ம
பரங்கிப்பேட்டை வட்டாரத்தில் பசுந்தாள் உர பயிரான தக்கை பூண்டு விதைகள் தேசிய வேளாண்மை அபிவிருந்தி திட்டத்தின் கீழ், மண் வள அபிவிருத்தி திட்ட இனத்தில் 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது என வேளாண் உதவி இயக்குநர் எஸ்.ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தி: குறுவை நெல் பயிரிடவுள்ள விவசாயிகள் பசுந்தாள் உர பயிர் செய்து 25 லிருந்து 30 நாட்களில் மடக்கி உழுது பின்னர் நடவு செய்யலாம். இவ்வாறு செய்யும்போது மண்ணில் அங்ககச்சத்துக்கள், பேரூட்டச்சத்துகள் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் அதிகமாகி பயிர்கள் செழித்து வளரும். பசுந்தாள் உரப்பயிர்கள் பயிர் செய்யப்பட்டு விளைவிக்கப்பட்ட நெற்பயிரில் விளைச்சல் அதிகரிப்பதோடு, அரிசியின் ருசியும் அதிகரிக்கிறது. வைக்கோலில் கூட தீவன ஊட்டம் அதிகமாகிறது. சிதம்பரம் மற்றும் பரங்கிப்பேட்டை வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் பசுந்தாள் உர பயிர் விதைகள் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என வேளாண் உதவி இயக்குநர் எஸ்.ரமேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.