பல்லடம் அருகே கூட்டுறவு சங்கத்தில் நிதி கையாடல்: வங்கிச் செயலர் கைது
பல்லடம் அருகே உள்ள பருவை தொடக்க கூட்டுறவு வேளாண் சங்கத்தில் ரூ.15 லட்சம் அளவுக்கு விவசாயிகளுக்கு
பல்லடம் அருகே உள்ள பருவை தொடக்க கூட்டுறவு வேளாண் சங்கத்தில் ரூ.15 லட்சம் அளவுக்கு விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் அளிப்பதாக போலி கையெழுத்துப் போட்டு, வங்கிச் செயலாளர் ஆறுச்சாமி நிதி கையாடல் செய்துள்ளார். இது, அதிகாரிகளின் ஆய்வுகளில் கண்டறியப்பட்டது. அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சங்க ஊழியர்கள் உறுப்பினர்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
இதை அடுத்து, பல்லடம் கூட்டுறவுச் சங்க சார்பதிவாளர் மாணிக்கவாசகம் உத்தரவின் பேரில் ஆறுச்சாமி பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.