முகப்பு
தற்போதைய செய்திகள்

காதலித்து திருமணம் செய்து கொண்ட பெண் தற்கொலை!

சிதம்பரம் அருகே கிள்ளை முழுக்குத்துறையைச் சேர்ந்த இதயப்பன் (28). மீனவரான இவரும் அதே பகுதியைச் சேர்ந்த சிந்தாமணி (24) என்ற பெண்ணும் காதலித்து ஒரு மாதம் முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் இதயப்பன் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முயன்றதாகக்

Updated On : 3 ஜனவரி, 2024 at 9:38 AM
பகிர்:

சிதம்பரம் அருகே கிள்ளையில் காதலித்து ஒரு மாதம் முன்பு திருமணம் செய்து கொண்ட பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

சிதம்பரம் அருகே கிள்ளை முழுக்குத்துறையைச் சேர்ந்த இதயப்பன் (28). மீனவரான இவரும் அதே பகுதியைச் சேர்ந்த சிந்தாமணி (24) என்ற பெண்ணும் காதலித்து ஒரு மாதம் முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் இதயப்பன் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட தகராறில் சிந்தாமணி இன்று காலை வீட்டில் புடவையால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கிள்ளை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளார். திருமணம் ஆகி ஒரு மாதம் ஆவதால் சிதம்பரம் உதவி ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →