4-ம் வகுப்பு மாணவர் கிணற்றில் தவறி விழுந்து சாவு
ஸ்ரீவில்லிபுத்தூர், இந்திராநாகர்-வள்ளுவர்நகரைச் சேர்ந்தவர் கருமலை மகன் பிரவின்குமார் (9). கருமலை கம்பி கட்டும் கூலி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி தீப்பெட்டி ஆலையில் கூலி வேலை செய்து வருகிறார்.
தற்போதைய செய்திகள்4-ம் வகுப்பு மாணவர் கிணற்றில் தவறி விழுந்து சாவு
ஸ்ரீவில்லிபுத்தூர், இந்திராநாகர்-வள்ளுவர்நகரைச் சேர்ந்தவர் கருமலை மகன் பிரவின்குமார் (9). கருமலை கம்பி கட்டும் கூலி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி தீப்பெட்டி ஆலையில் கூலி வேலை செய்து வருகிறார்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று கிணற்றில் குளிக்கும் போது தவறி விழுந்த 4-ம் வகுப்பு சிறுவன் உயிரிழந்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர், இந்திராநாகர்-வள்ளுவர்நகரைச் சேர்ந்தவர் கருமலை மகன் பிரவின்குமார் (9). கருமலை கம்பி கட்டும் கூலி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி தீப்பெட்டி ஆலையில் கூலி வேலை செய்து வருகிறார்.பிரவின்குமார், இந்திராநகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார். இன்று பள்ளி விடுமுறை என்பதால் வீட்டிற்கு அருகேயுள்ள கிணற்றில் உள்ளே இறங்கி நண்பர்களுடன் குளித்துள்ளார். நீச்சல் தெரியாத பிரவின்குமார் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.