முகப்பு
தற்போதைய செய்திகள்

கோவை வணிக வளாக கட்டடத்தில் தீ விபத்து : 4 பெண்கள் பலி

கோவையில் லட்சுமி மில்ஸ் சந்திப்பு அருகே உள்ள 4 மாடி வணிகக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பெண் ஊழியர்கள் பலியானார்கள்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:26 AM
பகிர்:

கோவையில் லட்சுமி மில்ஸ் சந்திப்பு அருகே உள்ள 4 மாடி வணிகக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பெண் ஊழியர்கள் பலியானார்கள்.

கோவையில் லட்சுமி மில்ஸ் சந்திப்பு பகுதியில் உள்ள 4 மாடி வணிகக் கட்டத்தில், 2க்கும் மேற்பட்ட தனியார் வங்கிகளும், சில காப்பீட்டு நிறுவனங்களும் இயங்கி வந்தன.

இந்த கட்டத்தின் 2வது மாடியில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்து, மளமளவென்று அடுத்தடுத்து மாடிகளுக்கும் பரவியது. கட்டடம் முழுவதும் தீ கொழுந்துவிட்டு எரிந்தது.

தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த பெண்கள் 4 பேர் உடல் கருகி பலியானார்கள். அவர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.

தீ விபத்தில் சிக்கி காயமடைந்த பலர், கோவை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பல லட்சம் மதிப்புள்ள பொருக்ள எரிந்து நாசமாகியுள்ளன.

காவல்துறையும், தீயணைப்புப் படை வீரர்களும் சேர்ந்து மீட்புப் பணிகளை செய்து வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →