உழவர் பெருவிழாவில் வேளாண் அதிகாரிகளை முற்றுகையிட்ட விவசாயிகள்!
காட்டுமன்னார்கோயில் அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உழவர் பெருவிழாவில் விவசாயிகள் கருப்பு பேட்ஜ் அணிந்து வேளாண் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
காட்டுமன்னார்கோயில் அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உழவர் பெருவிழாவில் விவசாயிகள் கருப்பு பேட்ஜ் அணிந்து வேளாண் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
காட்டுமன்னார்கோயில் பிள்ளையார்தாங்கல் கிராமத்தில் தமிழகஅரசின் சார்பில் வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடைத்துறை, கூட்டுறவுத்துறை பங்கேற்ற உழவர் பெருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வேளாண் உதவி இயக்குநர் விஜயகுமார் தலைமை வகித்தார்.
இவ்விழாவில் தமிழக அரசின் நலத்திட்டங்கள் சரியாக வழங்கப்படவில்லை, அரசு நிவாரணமும் சரியாக வழங்கப்படவில்லை என வலியுறுத்தி விவசாய சங்கத் தலைவர் பி.விநாயகமூர்த்தி தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கருப்பு பேட்ஜ் அணிந்து பங்கேற்றனர். பின்னர் கூட்டத்தில் தமிழகஅரசு விவசாயிகளுக்கு வழங்க உத்தரவிட்டுள்ள மானியத் திட்டங்கள் விவசாயிகளுக்கு சென்றடையவில்லை. மானியங்கள் குறித்து விவசாயிகளுக்கு தெரிவிக்கப்படவில்லை என கூறி அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு கலைந்து சென்றனர். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.