சிதம்பரம் அருகே வீடு புகுந்து 40 பவுன் நகைகள் திருட்டு!
சிதம்பரம் அருகே உள்ள புவனகிரி காவல் நிலையத்தின் அருகே வீடு புகுந்து 40 பவுன் நகைகள் திருடு போனது.
சிதம்பரம் அருகே உள்ள புவனகிரி காவல் நிலையத்தின் அருகே வீடு புகுந்து 40 பவுன் நகைகள் திருடு போனது.
புவனகிரி காவல் நிலையத்தின் எதிரில் உள்ள வீட்டில் வசித்து வருபவர் பிரேமநாதன் (62). வீட்டின் முன்புற பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர் குடும்பத்துடன் திங்கள்கிழமை காலை கீரப்பாளையம் அருகே உள்ள வடப்பாக்கத்தில் உள்ள குலதெய்வம் கோயிலுக்கு சென்று மாலை வீடு திரும்பினார். அப்போது மர்மஆசாமிகள் பூட்டை உடைத்து வீட்டிற்குள் புகுந்து பீரோவிலிருந்த 40 பவுன் நகைரள், ரூ.25 ஆயிரம் ரொக்கம் மற்றும் வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்றது தெரியவந்து அதிர்ச்சியுற்றார். திருடு போன பொருள்களின் மத்பிப்பு ரூ.8 லட்சமாகும். இதுகுறித்து புகாரின் பேரில் புவனகிரி போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.