காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது : திருச்சியில் வைகோ
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகியுள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகியுள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
திருச்சியில் இன்று பிரதமர் வருகையைக் கண்டித்து கருப்புக் கொடி போராட்டம் நடத்தி, வைகோ மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
அப்போது பேசிய வைகோ, இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது.
Advertisement
இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெற்றால், அதன் மூலம் 53 நாடுகளின் தலைவராக இலங்கை அதிபர் ராஜாக்சே பொறுப்பேற்கும் வாய்ப்பு உள்ளது. எனவே இந்தியா அதில் பங்கேற்கக் கூடாது.
ஒரு வேளை இந்தியா பங்கேற்றால், இவ்வளவு நாள் தமிழகத்தில் நடந்த போராட்டங்கள் அனைத்தும் அர்த்தமற்றதாகப் போய்விடும் என்பதால், நாங்கள் "பாரதப் பிரதமரே திரும்பிப் போ" என்ற முழக்கத்துடன் போராட்டம் நடத்தி கைதாகியுள்ளோம் என்று கூறினார்.