முகப்பு
தற்போதைய செய்திகள்

பிரதமர் வருகை : கருப்புக் கொடி காட்ட முயன்ற வைகோ உட்பட நூற்றுக்கணக்கானோர் கைது

திருச்சியை அடுத்த திருமயத்தில் பிஎச்இஎல் நிறுவனத்தின் ஒரு ஆலையைத் துவக்கி வைக்க பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் வெள்ளிக்கிழமை திருச்சி வருகிறார்.

Updated On : 2 ஆகஸ்ட், 2013 at 11:25 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 6:34 PM

திருச்சி வருகை தரும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கருப்புக் கொடி காட்ட முயன்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் பிற கட்சித் தலைவர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கைது கெய்யப்பட்டனர்.

திருச்சியை அடுத்த திருமயத்தில் பிஎச்இஎல் நிறுவனத்தின் ஒரு ஆலையைத் துவக்கி வைக்க பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் வெள்ளிக்கிழமை திருச்சி வருகிறார்.

தமிழகத்தில் எத்தனையோ பிரச்னைகள் இருக்க, அதற்கெல்லாம் செவி கொடுக்காத பிரதமர், ஒரு ஆலையைத் துவக்கி வைக்கும் ஒரு நிகழ்ச்சிக்காக தமிழகம் வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மதிமுக உட்பட் பல்வேறு கட்சிகள் சார்பில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர்.

Advertisement

இதையடுத்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழர் வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், தமிழ்  தேச பொதுவுடையை கேட்சித் தலைவர் மணியரசன் மற்றும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கு. ராமகிருஷ்ணன் உட்பட நூற்றுக்கணக்கோனார் திருச்சி விமான நிலையத்தில் கூடியிருந்தனர்.

பிரதமர் வருகையின் போது கருப்புக் கொடி காட்ட முயன்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உட்பட நூற்றுக்கணக்கானோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.