முகப்பு
தற்போதைய செய்திகள்

தரங்கம்பாடியில் கடல் உள்வாங்கியது

தரங்கம்பாடி டேனிஷ் கோட்டைக்கு அருகில் வரை கடல் நீர் இருக்கும். ஒவ்வொரு வருடத்திலும் ஆடி மாதங்களில் சாதாரணமாக சில நேரங்களில் கடல் நீர் உள்வாங்கும். ஆனால் இந்த முறை வழக்கத்திற்கு மாறாக

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:05 PM
பகிர்:

நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் வழக்கத்தைவிட கடல் உள்வாங்கியுள்ளதாக அப்பகுதி மக்கள் இன்று தெரிவித்தனர்.

சாதாரணமாக  தரங்கம்பாடி டேனிஷ் கோட்டைக்கு அருகில் வரை கடல் நீர் இருக்கும். ஒவ்வொரு வருடத்திலும் ஆடி மாதங்களில் சாதாரணமாக சில நேரங்களில் கடல் நீர் உள்வாங்கும். ஆனால் இந்த முறை வழக்கத்திற்கு மாறாக சுமார் 10 மீட்டர் தூரத்திற்கும் மேலாக கடல் உள்வாங்கியுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். அண்மைக் காலங்களில் இதுபோல் இருந்ததில்லை என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

கோட்டைக்கு எதிர்ப்புறம் சிதிலமடைந்த நிலையில் மதில் சுவர் இடிபாடுகளுடன் இருக்கும். பொதுவாக இந்த மதில் சுவர்களை சுற்றி அதிகமான நீர் இருக்கும். இங்கு சுற்றுலா வருவோர் இந்த மதில் சுவர்களின் மேல் ஏறித்தான் நடக்க முடியுமே தவிர கீழே இறங்கி நடக்கமுடியாது. ஆனால் தற்போது சுவரைச் சுற்றிலும் மணல்  தெரிகின்றன. மேலும் நீரில் மூழ்கியிருந்த சுவரின் இடிபாடுகளும் தெரிகின்றன. கோட்டையின் எதிர்ப்புறமும் இதுவரை நீர் இருந்த பகுதிகளில் மணல் மேடாகக் காட்சியளிக்கிறது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments