2005-ல் வெள்ளம் ஏற்பட்ட தவறு மீண்டும் ஏற்படக்கூடாது: பாஜக முதல்வருக்கு வலியுறுத்தல்
மேட்டூர் அணை நீர்மட்டம் இன்னும் 2 தினங்களில் முழுக்கொள்ளளவான 120 அடியை எட்டிவிடும். நீர்வரத்து 1 லட்சத்து 50 ஆயிரம் கனஅடியாக உள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன. வழக்கம்
2005-ல் வெள்ளம் ஏற்பட்ட தவறு மீண்டும் நிகழக்கூடாது. முன்கூட்டியே மேட்டுரிலிருந்து கூடுதலாக நீர் திறந்து விட வேண்டும் என பாஜக தேசிய கவுன்சில் உறுப்பினரும், காவிரி டெல்டா பாசன விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில துணைத் தலைவருமான கே.வி.கண்ணன்பிள்ளை தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மேட்டூர் அணை நீர்மட்டம் இன்னும் 2 தினங்களில் முழுக்கொள்ளளவான 120 அடியை எட்டிவிடும். நீர்வரத்து 1 லட்சத்து 50 ஆயிரம் கனஅடியாக உள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன. வழக்கம் போல் கர்நாடகம் தன்னுடைய அணைகளை முழுக்கொள்ளவு வைத்துக் கொண்டு நீர்வரத்தை அப்படியே மேட்டூருக்கு திருப்பி விடுகின்றன. சென்ற 2005-ம் ஆண்டு இதே போல் கர்நாடகம் அணைகளை நிரப்பிக் கொண்டு எந்தவித முன்னறிவிப்பின்றி சுமார் 3 லட்சம் கனஅடி நீரை மேட்டூரிக்கு திருப்பிவிட்டன. அன்று இருந்த தமிழகஅரசு மேட்டூர் அணையை 120 அடிக்கு வைத்திருந்ததால், வேறுவழியின்றி அப்படியே நீர்வரத்து 3 லட்சம் கனஅடியை காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் திறந்துவிட்டது.
கல்லணையிலிருந்து 48வது மயிலில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் வலது கரையில் தஞ்சை மாவட்டத்தின் பாபநாசம் அருகே வாழ்க்கை என்ற இடத்தில் உடைப்பு ஏற்பட்டது. மேலும் திருச்சி, கடலூர், தஞ்சை மாவட்டங்கள் கடும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டது. எனவே 2005 ஆண்டு நடைபெற்ற தவறு மீண்டும் ஏற்படாமல் இருக்க தமிழகஅரசு முன்னேற்பாடாக மேட்டூருக்கு வரும் நீர்வரத்தினை பாதி நீரை கல்லணைக்கு அனுப்ப வேண்டும். கல்லணையிலிருந்து வறண்டு கிடக்கும் காவிரி டெல்டா பகுதிகளுக்கு நீர் திறந்துவிட்டு ஏரிகள் மற்றும் குளங்களை நிரப்பிக் கொள்ளலாம். கொள்ளிடம் மற்றும் காவிரியில் திடீர் வெள்ளம் ஏற்படுவதை தடுக்கலாம் என கே.வி.கண்ணன்பிள்ளை தெரிவித்தார்.