தற்போதைய செய்திகள்

அனுமதியின்றி கருந்திரி கட்டுக்களை கடத்தியதாக ஒருவர் கைது

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி, தாயில்பட்டி ஆகிய பகுதிகளிலிருந்து சூலக்கரை மேடு வழியாக அருப்புக்கோட்டைக்கு பட்டாசுக்கு பயன்படுத்தப்படும் கருந்திரி கட்டுக்களை கடத்தி

எஸ். பாண்டியன்

அருப்புக்கோட்டை அருகே அனுமதியின்றி வாகனத்தில் கடத்திச் சென்ற 40 ஆயிரம் மதிப்புள்ள கருந்திரி கட்டுக்களை வாகனத் தனிக்கையின் போது  மடக்கி பிடித்து வெள்ளிக்கிழமை இரவு வட்டாட்சியர் சந்திரசேகரன் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி, தாயில்பட்டி ஆகிய பகுதிகளிலிருந்து சூலக்கரை மேடு வழியாக அருப்புக்கோட்டைக்கு பட்டாசுக்கு பயன்படுத்தப்படும் கருந்திரி கட்டுக்களை கடத்தி வருவதாக வட்டாட்சியர் சந்திரசேகரனுக்கு ரகசிய  தகவல் வந்தது. அதன் அடிப்படையில் அருப்புக்கோட்டை நகராட்சி காலனி-வெள்ளையாபுரம் சாலையில் வாகனத் தனிக்கையில் அதிகாரிகளுடன் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வ்நத வாகனத்தை வழிமறித்து சோதனையிட்டார். அப்போது பெரிய பண்டலாக இருந்ததை பிரித்த பார்த்த போது 4 ஆயிரம் கருந்திரி கட்டுக்கள் இருந்தது தெரியவந்தது.

இது குறித்த விசாரணையில் தாயில்பட்டி அருகே கட்டனஞ்செவல்பட்டியைச் சேர்ந்த வாகன ஓட்டுநர் கோபால்சாமி(50) என்பது தெரியவந்தது. மேலும், விசாரித்த போது வாகனத்தின் உரிமையாளர் கோப்பம்மாள் என்பதும், கருந்திரி கட்டுக்களை வெள்ளையாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் முனியசாமியின் பட்டாசு ஆலைக்கு கொண்டு செல்வதாகவும் தகவல் தெரிவித்தனர். அதையடுத்து, கருந்திரி கட்டுக்களுடன் வாகனத்தை பறிமுதல் செய்து அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இது தொடர்பாக ஓட்டுநர் கோபால்சாமியை போலீஸார் கைது செய்தனர். மேலும், வாகனத்தின் உரிமையாளர், பட்டாசு ஆலையை நடத்துவோர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

பைக்கில் சென்ற பெண்ணின் நகை பறிப்பு

தில்லியில் பயங்கரவாத சதி: வங்கதேசத்தினா் உள்பட 8 போ் கைது

SCROLL FOR NEXT