விருதுநகர் அருகே 4 வழிச்சாலையை கடக்க முயன்ற போது பெண் மான் வாகன விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து உயிரிழந்தது.
விருதுநகர் அருகே மருளூத்துக்கும்-பட்டம்புதூருக்கும் இடையில் உள்ள பகுதிகளில் மான்கள் இரை மற்றும் தண்ணீர் தேடி விவசாய தோட்டங்களுக்குச் செல்வது வழக்கமாகும். அதேபோல், இன்று காலையில் கண்மாய் பகுதியிலிருந்து வெளியேறி இரை தேடி காட்டுப் பகுதிக்கு செல்வதற்காக 4 வழிச்சாலையை கடந்து செல்லும் போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்து தலை சிதறி உயிரிழந்தது.
இதை அப்பகுதியில் வாகனச் சோதனை மேற்கொள்வதற்கு வாகனத்தில் சென்ற போலீஸார் பார்த்துள்ளனர். அதையடுத்து, இது தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறை அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். பின் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் பெண்மானை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாகனத்தில் எடுத்துச் சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.