தற்போதைய செய்திகள்

விருதுநகரில் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை கேட்டு அலையும் வளர்ச்சியில்லாத இளைஞர்

விருதுநகர் அருகே அல்லம்பட்டியைச் சேர்ந்த அழகம்மாள் என்பவரின் மகன் சண்முகவேல்(29). இவரது தாய் கணவரால் கைவிடப்பட்டவர் ஆவார். இந்நிலையில் இப்பகுதியில் உள்ள தனியார்

எஸ். பாண்டியன்

விருதுநகரில் வயதிற்கேற்ப வளர்ச்சியில்லாத இளைஞர்  மாற்றுத்திறனாளி அடையாள கேட்டு தனது தாயுடன் அலைந்து வருகிறார்.

விருதுநகர் அருகே அல்லம்பட்டியைச் சேர்ந்த அழகம்மாள் என்பவரின் மகன் சண்முகவேல்(29). இவரது தாய் கணவரால் கைவிடப்பட்டவர் ஆவார். இந்நிலையில் இப்பகுதியில் உள்ள தனியார் திரையரங்கில் துப்புரவு தொழிலாளியாக வேலைபார்த்து, அதில் கிடைக்கும் குறைந்த வருமானத்தைக் கொண்டு வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.எனவே சண்முகவேலுக்கு வயதுக்கேற்ப வளர்ச்சியில்லாமலும், உடல் அமைப்பு குறைபாடுடன் 7 வயதுக்குறிய வளர்ச்சியுடன் இருந்து வருவதால் எந்த வேலையும் செய்ய முடியாத நிலை இருக்கிறது. இதையடுத்து,  மாற்றுத் திறனாளிகளுக்கான அரசு உதவித் தொகை பெற மாற்றுத்திறனாளி அடையாள அட்டை வேண்டி மாவட்ட சமூக நலத்துறை அலுவலரிடம் மனுக் கொடுத்தார். ஆனால், அங்கு சோதனை செய்யப்பட்ட நிலையிலும், குள்ளமாக இருந்தாலும் உதவித் தொகை பெறமுடியாது என்றும், நன்றாக இருப்பதாக கூறியும் திருப்பி அனுப்பிவிட்டனர்.

இது குறித்து சண்முகவேல் கூறியதாவது: என்னால் எந்த வேலையும் செய்ய முடியாத நிலையில் இருந்து வருகிறேன். எனது தாயார் வேலை செய்து வரும்  குறைந்த வருமானத்தில் தான் எனது தங்கையோடு வாழ்ந்து வருகிறேன். இந்நிலையில் மாற்றுத்திறனாளி உதவித் தொகை பெறுவதற்காக விண்ணப்பித்தேன். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பல மாதங்களாக தாமதம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆட்சியரிடம் மனு அளித்திருந்தேன். அந்த மனு மறுபடியும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு பரிசீலனைக்கு வந்ததுள்ளதாக கூறி அழைத்தனர். அதையடுத்து, எனது தாயருடன் சென்ற நிலையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு எழுதிக் கொடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கும் மாற்று திறனாளி அடையாள அட்டை வழங்க முடியாது எனக் கூறி திருப்பி அனுப்பி அலைகழிப்பு செய்து வருவதாக சண்முகவேல் தெரிவித்தார்.     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

பைக்கில் சென்ற பெண்ணின் நகை பறிப்பு

தில்லியில் பயங்கரவாத சதி: வங்கதேசத்தினா் உள்பட 8 போ் கைது

SCROLL FOR NEXT