முகப்பு
தற்போதைய செய்திகள்

போலீஸார் தேடுவதை அறிந்து ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை

திருவாரூர் மாவட்டம் களப்பால் காவல் சரகம் கள்ளியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அப்பாவு மகன் அருணாசலம் (48). இவர் நேற்று

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:09 PM
பகிர்:

திருவாரூர் மாவட்டம் களப்பால் காவல் சரகம் கள்ளியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அப்பாவு மகன் அருணாசலம் (48). இவர் நேற்று கோட்டூர் கீழச்சேரியில் உள்ள ஜெயலலிதா பேரவைச் செயலாளர் பாலகிருஷ்ணன் என்பவரின் மனைவி பவானி என்பவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி நகையைப் பறிக்க முயன்றாராம்.

பவானி கூச்சலிடவே இவர் ஓடிவிட்டாராம். இதுகுறித்து பவானி கோட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் தன்னைத் தேடுவதை அறிந்த அவர், ஆலிவலம் காவல் சரகம் திருப்பத்தூர் கிராமத்தில் கிளிப்பிள்ளை என்பவரின் பூட்டியிருந்த வீட்டின் பின்புறத்தில் உள்ள மாமரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆலிவலம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →