தற்போதைய செய்திகள்

திருச்சுழி அருகே குடும்ப பிரச்னை காரணமாக தாய், மகள் வெட்டிக் கொலை

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே ராகோபாலபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு (40). இவர் கூலி தொழிலாளியாக தூத்துக்குடியில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாள்களாக

எஸ். பாண்டியன்

திருச்சுழி அருகே குடும்ப பிரச்னையின் காரணமாக ஆத்திரத்தில்  தூங்கிக் கொண்டிருந்த மனைவி, மகள் ஆகியோரை வெட்டி படுகொலை செய்த தொழிலாளியை கைது போலீஸார் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே ராகோபாலபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு (40). இவர் கூலி தொழிலாளியாக தூத்துக்குடியில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாள்களாக வேலைக்குச் செல்லாமலே வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுபோன்ற காரணங்களால் வீட்டிலும் அடிக்கடி குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டதாம். இதையடுத்து வழக்கம் போல் வெள்ளிக்கிழமை இரவு மனைவி சின்னமுனியம்மாள் (35), மகள் முத்துச்செல்வி(12) மகன் முனியாண்டி(10) ஆகியோருடன் தூங்கிக் கொண்டிருந்தாராம். அப்போது, திடீரென திடீரென எழுந்த வேலு, தனது மனைவி, மகள் மற்றும் மகன் ஆகியோரை அரிவாளால் சரமரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் சம்பவ இடத்திலேயே மனைவி சின்ன முனியம்மாள், மகள் முத்துச்செல்வி ஆகியோர் படுகாயம் அடைந்து உயிரிழந்தார். மகன் முனியாண்டி கையில் வெட்டுக் காயங்களுடன் வீட்டை விட்டு வெளியேறி உறவினர் வீட்டிற்குச் சென்றாராம். அங்கும் சென்ற வேலு உறவினரான மூதாட்டி தனலட்சுமிக்கும்(65) அரிவாள் வெட்டு விழுந்தது.

இது குறித்து கிராம மக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அதையடுத்து  திருச்சுழி டி.எஸ்.பி ராமானுஜம், பரளச்சி காவல் நிலைய ஆய்வாளர் மணிவண்ணன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் காயம் அடைந்த முனியாண்டி மற்றும் மூதாட்டி தனலட்சுமி ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர், கொலை செய்யப்பட்டு கிடந்த சின்ன முனியம்மாள், முத்துச்செல்வி ஆகியோரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், கொலை செய்யப்பட்ட முத்துச்செல்வி அரசு நடுநிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பும், காயம் அடைந்தவர் தொடக்கப்பள்ளியில் 5-வது படித்து வருகிறார்கள். அதோடு, இவரின் மூத்த மகள் பிரியா(19) மதுரை நர்சிங் கல்லூரியில் படித்து வந்ததால் தந்தையின் கொலை வெறித் தாக்குதலில் இருந்து தப்பித்துக் கொண்டார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து வேலுவை கைது செய்த   போலீஸார் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

பைக்கில் சென்ற பெண்ணின் நகை பறிப்பு

தில்லியில் பயங்கரவாத சதி: வங்கதேசத்தினா் உள்பட 8 போ் கைது

SCROLL FOR NEXT