தற்போதைய செய்திகள்

கூட்டுறவு வங்கி உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டோரின் பட்டியலை வெளியிட கோரி நேர்முகத் தேர்வில் பங்கேற்றோர் முற்றுகை

கடந்த ஆண்டு மாநில ஆள் சேர்ப்பு வாரியத்தின் மூலம் கூட்டுறவு வங்கியின் உதவியாளர் பணிக்கான எழுத்துத தேர்வு 9.12.2012 அன்றைய நாளில் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் நடத்தப்பட்டது. அதைத்

எஸ். பாண்டியன்

கூட்டுறவு வங்கி உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியலை வெளியிட வலியுறுத்தி நேர்முகத் தேர்வில் பங்கேற்றவர்கள் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

கடந்த ஆண்டு மாநில ஆள் சேர்ப்பு வாரியத்தின் மூலம் கூட்டுறவு வங்கியின் உதவியாளர் பணிக்கான எழுத்துத தேர்வு 9.12.2012 அன்றைய நாளில் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றோர்களின் பட்டியல் 19.12.2012ல் வெளியிடப்பட்டது. அதையடுத்து, இத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு 28.12.2012 முதல் 3.1.2013 வரையில் சென்னையில் நடைபெற இருக்கிற நேர்முகத் தேர்வில் கலந்து கொள்வதற்கு  அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், 28.12.2012 அன்று ஒருநாள் மட்டும் சென்னையில் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது.

அதன் பின் மழை போன்ற இயற்கை தடையின் காரணமாக நேர்முகத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. அதோடு, மீதி நாள்களில் நடைபெற இருந்த நேர்முகத் தேர்வை 28.1.2013 முதல் 31.1.2013 வரையில் அந்தந்த மாவட்டத் தலைநகரங்களில் நடத்தப்பட்டது. இத்தேர்வில், தமிழகம் முழுவதும் மொத்தம் 7200 பேர்கள் வரையில் கலந்து கொண்டனர்.இது குறித்து சுந்தரபாண்டியத்தைச் சேர்ந்த பட்டதாரி காளீஸ்வரி என்பவர் கூறியதாவது: இப்பணிக்கான நேர்முகத் தேர்வு முடிந்து 7 மாதங்கள் ஆன நிலையில் இறுதிப் பட்டியலை இதுவரையில் வெளியிடப்படாமலே இருக்கிறது. இதனால் இத்தேர்வில் கலந்து கொண்டவர்கள் வேலைவாய்ப்பில்லாமலும், எதிர்காலமே கேள்விக்குறியாகும் நிலைமை உள்ளது. ஏற்கனவே இது தொடர்பாக தமிழக முதல்வருக்கு இறுதி பட்டியலை வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்தி கோரிக்கை மனு அனுப்பியுள்ளோம். தற்போது, மாவட்ட ஆட்சியரிடமும் நேரில் மனு நேரில் அளித்தோம் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளதாக காளீஸ்வரி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT