முகப்பு
தற்போதைய செய்திகள்

யானைகளை பாதுகாப்பாக விரட்ட மக்களின் ஒத்துழைப்பு தேவை

ரிஷிவந்தியம் பகுதிக்கு உட்பட்ட இடங்களில் 6 யானைகள் புகுந்து, விளைநிலம், வீடுகளை சேதப்படுத்தி வருகின்றன. இதனால், கிராம மக்கள் பீதி

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:13 PM
பகிர்:

யானைகளை வனப்பகுதிக்குள் பாதுகாப்பாக விரட்ட பொதுமக்களின் ஒத்துழைப்பு வேண்டும் என்றனர் வனத்துறை அதிகாரிகள்.

ரிஷிவந்தியம் பகுதிக்கு உட்பட்ட இடங்களில் 6 யானைகள் புகுந்து, விளைநிலம், வீடுகளை சேதப்படுத்தி வருகின்றன. இதனால், கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர். விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்வதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இந்நிலையில், யானைகளை பாதுகாப்பாக விரட்டும் பணியில்

வனச்சரக அதிகாரிகள் காவல் துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இரவு பகலாக முயற்சி செய்தும், யானைகளை விரட்ட முடியவில்லை. இது குறித்து அதிகாரிகள் தெரிவித்த போது, யானைகளை பாதுகாப்பாக விரட்ட முற்பட்டபோது ஒரு பக்கமாக மக்கள் கூடிநின்று, யானைகளை திசை திருப்புகின்றனர், இதனால் அவற்றை பாதுகாப்பாக விரட்ட முடியவில்லை; பொதுமக்கள் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே பாதுகாப்பாக யானைகளை விரட்ட முடியும் என்று தெரிவித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →