முகப்பு
தற்போதைய செய்திகள்

அரசு பேருந்தில் கைத்துப்பாக்கி மற்றும் கத்தி பறிமுதல்

ஈரோட்டில் இருந்து சென்னைக்கு வந்த அரசு விரைவு பேருந்தில் இருந்து கத்தி மற்றும் கைத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Updated On : 21 ஆகஸ்ட், 2013 at 11:09 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 6:49 PM

ஈரோட்டில் இருந்து சென்னைக்கு வந்த அரசு விரைவு பேருந்தில் இருந்து கத்தி மற்றும் கைத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஈரோட்டில் இருந்து சென்னைக்கு ஒரு அரசு விரைவு பேருந்து வந்து கொண்டிருந்தது. பேருந்து விழுப்புரம் அருகே வந்த போது அதில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த நாராயணன் தனது பணம் ரூ.9 ஆயிரத்தைக் காணவில்லை என்று நடத்துநரிடம் தெரிவித்தார்.

இதையடுத்து பேருந்து விழுப்புரம் மேற்கு பகுதி காவல்நிலையத்தில் நிறுத்தப்பட்டது. பேருந்துக்குள் இருந்த பயணிகளிடம் போலீசார் சோதனையிட்டனர். அப்போது, பேருந்தில், ஒரு மர்ம பையில் இருந்து கைத் துப்பாக்கி ஒன்றும், கத்தி ஒன்றும் கைப்பற்றப்பட்டது.

Advertisement

துப்பாக்கி  யாருடையது என்பது தெரிய வரவில்லை. இதனால், பேருந்தில் இருந்த அனைத்து பயணிகளிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் சந்தேகத்தின் அடிப்படையில் 4 பேரை மட்டும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.