இலங்கைத் தமிழர்களை பாதுகாக்க வேண்டும் என நினைத்து மத்திய அரசு செயலாற்றி வருகிறது: சுதர்சன நாச்சியப்பன்
தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை சிலர் தடுக்கும் எண்ணத்துடன் சில தீய சக்திகள் செயல்பட்டு வரும் நிலை மாற வேண்டும் என்றார் மத்திய தொழில் மற்றும் வர்த்தக துறை இணை அமைச்சர் இ.எம்.
தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை சிலர் தடுக்கும் எண்ணத்துடன் சில தீய சக்திகள் செயல்பட்டு வரும் நிலை மாற வேண்டும் என்றார் மத்திய தொழில் மற்றும் வர்த்தக துறை இணை அமைச்சர் இ.எம். சுதர்சன நாச்சியப்பன்.
தூத்துக்குடியில் இன்று நடைபெற்ற சட்டப்பேரவை முன்னாள் தலைவர் எஸ். செல்லப்பாண்டியன் நூற்றாண்டு விழாவில், சிறப்புமலரை வெளியிட்டு அவர் பேசியதாவது:
நாட்டில் உள்ள அனைத்து மக்களும் பயன்பெரும் வகையில் மத்திய அரசு உணவு பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வந்துள்ளது. சிலர் இந்தத் திட்டத்தை எதிர்க்கின்றனர். பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி மக்களின் நலனுக்காக இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.பெருந்தலைவர் காமராஜர் தமிழக முதல்வராக இருந்தபோது கொண்டு வரப்பட்ட திட்டங்களும், சட்டங்களும்தான் தற்போது நடைமுறையில் உள்ளது. சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளும் சீரான தொழில் வளர்ச்சியை பெற வேண்டும் என்பதற்காக அவர் பாடுபட்டார்.
சட்டப்பேரைவயில் பேரவைத் தலைவர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு இன்று வரை முன்மாதிரியாக திகழ்பவர் எஸ். செல்லப்பாண்டியன். அவரை முன்மாதிரியாகக் கொண்டு தென் மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சியை மேலும் வலுப்படுத்த வேண்டும்.எஸ். செல்லப்பாண்டியன் உயிரோடு இருந்திருந்தால் தொழில் வளர்ச்சியில் தென் மாவட்டம் இன்னும் வளர்ச்சி அடைந்து இருக்கும். தென் மாவட்டங்களின் வளர்ச்சியை தடுக்கும் வகையில் எந்த தொழில் தொடங்க முற்பட்டாலும் அதற்கு தடை செய்து கொண்டு இருக்கின்றனர். இந்த நிலை மாற வேண்டும்.பிரதமர் இலங்கைக்குச் செல்லக்கூடாது என சிலர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால், இலங்கையில் உள்ள தமிழர்கள் நம் பிரதமரை வர வேண்டும் என அழைக்கின்றனர். இலங்கைத் தமிழர்களை பாதுகாக்க வேண்டும் என்பதையே நினைத்து மத்திய அரசு செயலாற்றி வருகிறது என்றார்.
விழாவின்போது, சட்டப்பேரவை முன்னாள் தலைவர் எஸ். செல்லப்பாண்டியன் நினைவு அஞ்சல் உறையை அஞ்சல் துறை தென்மண்டல தலைவர் சாருகேசி வெளியிட முதல் உறையை மத்திய இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் பெற்றுக் கொண்டார்.முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், மக்களை முன்னாள் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் வேலுச்சாமி, காங்கிரஸ் மாவ்டடத் தலைவர்கள் எஸ்.ஜஸ்டின், பி. கதிர்வேல், நூற்றாண்டு விழாக் குழுச் செயலர் ஏபிசிவி சண்முகம், எஸ். செல்லப்பாண்டியனின் மகன் சிவக்குமார், மாமன்ற உறுப்பினர் சந்திரபோஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.