முகப்பு
தற்போதைய செய்திகள்

கட்டிடத் தொழிலாளி கொலை - இளைஞர் கைது

குடி போதையில் இருவருக்கிடையே ஏற்பட்ட தகராறில் கட்டிடத் தொழிலாளி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக இளைஞரை போலசார் கைது செய்தனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:23 PM
பகிர்:

குடி போதையில் இருவருக்கிடையே ஏற்பட்ட தகராறில் கட்டிடத் தொழிலாளி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக இளைஞரை போலசார் கைது செய்தனர்.

  அருப்புகோட்டை ராமசாமிபுரத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து (48). இவரும் இதே ஊரைச் சேர்ந்த ரகுவரன் (26) மற்றும் மேலும் 10 பேர் சிவகங்கை மாவட்டம் பையூரில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து கட்டிடப் பணிகளை செய்து வருகின்றனர்.

 இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு குடிபோதையில் இருந்த மாரிமுத்து-ரகுவரனுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாம். இதில் ஆத்திரமடைந்த ரகுவரன் கல்லால் மாரிமுத்துவைத் தாக்கினாராம். இதனால் சம்பவ இடத்திலேயே அவர் மரணமடைந்தார். இது குறித்து சிவகங்கை நகர் போலீசார் திங்கள்கிழமை ரகுவரனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட ரகுவரனுக்கு சந்திரா என்ற மனைவியும், தர்மேந்திரா(10) என்ற மகனும் உள்ளனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments