முகப்பு
தற்போதைய செய்திகள்

சென்னை பொறியியல் மாணவி தூக்கிட்டு தற்கொலை

சென்னை, விநாயகபுரத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மகள் கலையரசி (22). செவித்திறன் குறைவுடைய மற்றும் வாய்பேச இயலாத இவர், விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவிலில் உள்ள

தற்போதைய செய்திகள்

சென்னை பொறியியல் மாணவி தூக்கிட்டு தற்கொலை

சென்னை, விநாயகபுரத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மகள் கலையரசி (22). செவித்திறன் குறைவுடைய மற்றும் வாய்பேச இயலாத இவர், விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவிலில் உள்ள

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:23 PM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த வாய் பேச இயலாத, செவித்திறன் குறைவுடைய சென்னையைச் சேர்ந்த மாணவி கலையரசி இன்று மாலை விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை, விநாயகபுரத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மகள் கலையரசி (22). செவித்திறன் குறைவுடைய மற்றும் வாய்பேச இயலாத இவர், விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவிலில் உள்ள கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் சிறப்பு பி.டெக். 6 ஆண்டு படிப்பில் கணினி அறிவியல் பிரிவில் இறுதியாண்டு படித்து வந்தார். பல்கலைக்கழக விடுதியில் தங்கி படித்து வந்த கலையரசி திங்கள்கிழமை வகுப்பிற்குச் சென்றுவிட்டு, மாலை விடுதி அறைக்கு வந்தவுடன் தூக்கிட்டுள்ளார். இதனையடுத்து உடனடியாக அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர், கலையரசி ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறிவிட்டார். இது குறித்து கிருஷ்ணன்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கலையரசியின் மர்ம மரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →