முகப்பு
தற்போதைய செய்திகள்

மயிலாடுதுறை நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: சோதனை

மயிலாடுதுறை நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு கடிதம் வந்ததால், வளாகத்தில் இருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:24 PM
பகிர்:

மயிலாடுதுறை நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு கடிதம் வந்ததால், வளாகத்தில் இருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.

மயிலாடுதுறை நீதிமன்றத்துக்கு ஏற்கெனவே பாங்கரவாதிகள் மிரட்டல் விடுத்துவந்ததால், தாக்குதல் எச்சரிக்கை செய்திருந்தனர்.

இந்நிலையில், மயிலாடுதுறை முதன்மை சார்பு நீதிபதிக்கு ஒரு மர்ம கடிதம் வந்தது. அதில், ஒரு பெண் மனித வெடிகுண்டு மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஊடுருவியுள்ளதாக மிரட்டல் விடுக்கப்பட்டது. இதை அடுத்து, எல்லா வழக்குகளும் ஒத்திவைக்கப்பட்டு அனைவரும் வெளியேற்றப் பட்டனர். இதன் பின்னர் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, சோதனை மேற்கொள்ளப்பட்டது.

மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருப்பதால், வளாகத்தில் செயல்பட்ட ஏழு நீதிமன்றங்கள் மகாதானத் தெருவில் உள்ள அம்பாபாய் திருமணமண்டபம், எம்.ஆர்.பி. திருமண மண்டபம் ஆகிய 2 திருமண  மண்டபங்களில் தாற்காலிகமாக செயல்பட்டு வருகின்றன. இந்த 7 நீதிமன்றப் பணிகளும் நிறுத்திவைக்கப்பட்டு சோதனை நடந்து வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →