தற்போதைய செய்திகள்

கிழக்கு காவல் நிலையம் அமைப்பதற்கான இடத்தை நகராட்சி உடனே வழங்க முதல்வருக்கு கோரிக்கை

விருதுநகர் கிழக்கு காவல் நிலையம் அமைப்பதற்கு நகராட்சிக்கு உரிய இடத்தை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு பாண்டியன் கிராம வங்கியின் இயக்குநர் மற்றும்

எஸ். பாண்டியன்

விருதுநகர் கிழக்கு காவல் நிலையம் அமைப்பதற்கு நகராட்சிக்கு உரிய இடத்தை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு பாண்டியன் கிராம வங்கியின் இயக்குநர் மற்றும் முன்னாள் நகர் மன்ற துணைத் தலைவர் எஸ்.பாலகிருஷ்ணசாமி மனு அனுப்பியுள்ளார்.

விருதுநகரில் கிழக்கு காவல் நிலையம் நகராட்சி பூங்காவிற்கு பின்புறம் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. தற்போது, காவல் நிலையத்திற்கு சொந்த கட்டடம் அமைப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இப்பகுதியில் உள்ள கல்லூரி சாலையில் நகராட்சிக்கு உரிய இடத்தில் அமைப்பதற்காக கூட்டத்தில் கடந்த ஆண்டு 29.2.2012 அன்று ஒப்புதல் அளிக்கப்பட்டது.

ஆனால், இக்குறிப்பிட்ட இடத்தை கொடுக்காமல் நகராட்சி நிர்வாகம் காலதாமதம் செய்து வருகிறது. ஆகவே, சென்னையில் நகராட்சி ஆணையாளருக்கு உத்தரவு பிறப்பித்து உடனடியாக காவல் நிலையம் அமைக்க இடநுழைவு சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்நிலையில் இக்காவல் நிலையத்தை அரசுக்கு சொந்தமான இடமாக கருதி குறிப்பிட்ட எல்லைப் பகுதியிலிருந்து தொலைதூரத்தில் அமைக்க பரிசீலனை நடந்து வருவதாக தெரியவருகிறது.

உடனே, அதை கைவிட்டுவிட்டு பொதுமக்களுக்கு உதவும் வகையில் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கலை அறிவியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, மாவட்ட தலைமை மருத்துவமனை ஆகியவைகள் உள்ள இப்பகுதியிலேயே காவல் நிலையத்தை அமைக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் முன்னாள் நகராட்சி மன்றத் தலைவர் மற்றும் பாண்டியன் கிராம வங்கியின் இயக்குநர் பாலகிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT