தற்போதைய செய்திகள்

விருதுநகரில் மாலையில் திடீர் மழை

விருதுநகரில் மழை மேகம் சூழ்ந்து காணப்பட்ட நிலையில் வியாழக்கிழமை மாலையில் கனமழை பெய்தததால் பழைய பேருந்து நிலைய பகுதிகளில் குளம் போல் தண்ணீர் தேங்கியது. நீண்ட நாள்களுக்கு பின்னர் பெய்த

எஸ். பாண்டியன்

விருதுநகரில் மழை மேகம் சூழ்ந்து காணப்பட்ட நிலையில் வியாழக்கிழமை மாலையில் கனமழை பெய்தததால் பழைய பேருந்து நிலைய பகுதிகளில் குளம் போல் தண்ணீர் தேங்கியது. நீண்ட நாள்களுக்கு பின்னர் பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

கடந்த சில நாள்களாகவே கடுமையான வெயில் அடித்து வந்தது. அதையடுத்து  கருமேகம் சூழ்ந்திருந்த நிலையிலும் லேசான மழையுடன் இருந்து வந்தது.  அதேபோல், மாலை வரையில் கடும் வெயில் அடித்தது. அதையடுத்து 6 மணிக்கு கருமேகம் சூழ்ந்து திடீரென கனமழை பெய்யத் தொடங்கியது. இம்மழையால் நீண்ட நாள்களுக்கு பின் தெருக்களில், சாலை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.

அதேபோல், சுற்றுப்பகுதிகளில் உள்ள கழிவு நீர் வாய்க்கால்களில் இருந்து வெளியேறிய மழை நீர் அனைத்தும் விருதுநகர் பழைய பேருந்து நிலையத்திற்குள் புகுந்து தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சியளித்தது. இதனால், மாலையில் வேலைக்குச் சென்ற தொழிலாளர்களும், பள்ளி விட்டு வந்த மாணவ, மாணவிகள் ஆகியோர் கூட்டத்தினர் நிற்க முடியாத நிலை இருந்தது. மேலும், கழிவு நீரால் பேருந்து நிலையத்தில் நிற்க முடியாத நிலையில் துர்நாற்றமாகவும் இருந்தது. இம் மழையால் பொதுமக்கள் பஸ்களில் ஏற முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர்.

இந்த மழையால் கிராமப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் அனைவரும் விதைப்பு பணிகளை தொடங்கியிருந்தனர். தற்போது, பெய்து வரும் மழையால் விதைகள் முளைப்புத்திறன் பெறும் வகையில் பெய்துள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT