தற்போதைய செய்திகள்

நேரு யுவகேந்திரா சார்பில் சிறந்த இளையோர் மன்ற விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

நேரு யுவகேந்திரா சார்பில் ஆண்டுதோறும் சிறப்பாக செயல்படும் இளையோர் மன்றங்களை பொதுமக்களுக்கு அடையாளப்படுத்தும் வகையில் தேர்வு செய்து விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்ட நேரு யுவகேந்திரா சார்பில் சிறந்த இளையோர் மன்ற விருது பெற சிறந்த இளையோர் மன்றங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இது குறித்து மாவட்ட நேரு யுவகேந்திராவின் ஒருங்கிணைப்பாளர் ராபர்ட்ஜேம்ஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

நேரு யுவகேந்திரா சார்பில் ஆண்டுதோறும் சிறப்பாக செயல்படும் இளையோர் மன்றங்களை பொதுமக்களுக்கு அடையாளப்படுத்தும் வகையில் தேர்வு செய்து விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல், நிகழாண்டில் இளையோர் மன்றத்தை தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட இருக்கிறது.இதில், மாவட்ட அளவில் தேர்வு செய்யப்படும் சிறந்த மன்றம் ஒன்றிற்கு ரூ.10 ஆயிரமும் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் ஆகியவைகளும் வழங்கப்படும். மாவட்ட அளவில் தேர்ந்து எடுக்கப்படும் மன்றங்கள் மாநில அளவில் விருதுக்கான தேர்வுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

தகுதிகள்: இத்தேர்வில் பங்கேற்க குறிப்பிட்ட தகுதிகளை பெற்றிருப்பது அவசியம் ஆகும். பங்கேற்கும் இளையோர் மன்றங்கள் அரசு விதிமுறைப்படி பதிவு செய்து நேரு யுவகேந்திராவுடன் இணைத்திருக்க வேண்டும். கடந்த ஆண்டு 1.4.2012 முதல் 31.4.2013 வரையில் இளைஞர் மன்றங்கள் செய்த சேவைகள் விரிவாக குறிப்பிடுவதோடு, அதற்கான ஆதாரங்களையும் விண்ணப்பத்தோடு இணைக்க வேண்டும். இந்த விருதுக்கான விண்ணப்பங்கள் நேரு யுவகேந்திரா அலுவலகத்தில்  நேரில் வந்து பெற்றுக் கொள்ளலாம்.

அதோடு, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மாவட்ட நேரு யுவகேந்திரா அலுவலகம், குமாரசாமி ராஜா நகர், சூலக்கரை காவல் நிலையம் அருகில், விருதுநகர்-626002 என்ற முகவரிக்கு வருகிற செப்-10ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராபர்ட்ஜேம்ஸ் தெரிவித்துள்ளார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT