முகப்பு
தற்போதைய செய்திகள்

இளம் பெண் கொலைக்காக கடத்தல்? போலீஸார் தீவிர விசாரணை

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து இளம் பெண் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது தன்னை கொலை செய்ய கூட்டிச் செல்வதாக கூக்குரலிட்டதையடுத்து

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:04 PM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து இளம் பெண் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது தன்னை கொலை செய்ய கூட்டிச் செல்வதாக கூக்குரலிட்டதையடுத்து போலீஸார் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள போலீஸாருக்கு தகவல்களைக் கொடுத்து சம்பந்தப்பட்ட வாகனத்தை மடக்கி பிடித்து இருவரையும் காவல் நிலையம் கொண்டுவந்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர், வ.உ.சி. நகரைச் சேர்ந்தவர் ஜீவா (30). இவருக்கு ஒரு மகன் உண்டு. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் ஜீவா தனது கணவரை விவாக ரத்து செய்துவிட்டாராம். இதனையடுத்து மதுரையைச் சேர்ந்த சுந்தர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திங்கள்கிழமை மாலை 5 மணியளவில் இரு சக்கர வாகனத்தில் ஜீவாவை ஸ்ரீவில்லிபுத்தூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சுந்தர் அழைத்துச் சென்று கொண்டிருந்துள்ளார்.

 ஸ்ரீவில்லிபுத்தூர் துப்பாக்கி சுடும் மைதானம் அருகே நெடுஞ்சாலை ரோந்து வாகனம் நின்று கொண்டிருந்துள்ளார். ஜீவா, தன்னை கொலை செய்ய கடத்திச் செல்வகாக கூக்குரலிட்டுள்ளார். போலீஸாரைப் பார்த்தும் இரு சக்கர வாகனம் நிற்காமல் சென்று கொண்டிருந்துள்ளது. இதனையடுத்து அந்த இடத்தில் இருந்த நெடுஞ்சாலை ரோந்து வாகனத்திலிருந்து, தேசிய நெடுஞ்சாலையில் ரோந்துப் பணியில் ஆங்காங்கே இருந்த போலீஸாருக்கு மைக்கில் தகவல் தரப்பட்டது.

கிருஷ்ணன்கோவிலைத் தாண்டி, லட்சுமியாபுரம் விலக்கு அருகே பணியில் இருந்த நத்தம்பட்டி காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் வேலாயுதம் இரு சக்கர வாகனத்தை மடக்கி பிடித்தார். முதல் கட்டமாக சுந்தரிடம் விசாரித்ததில், ஜீவா தற்போது பலருடன் செல்போனில் தொடர்பு வைத்துள்ளார். இதனால் மதுரைக்கு அழைத்துச் செல்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதனையடுத்து இருவரையும் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்திற்கு போலீஸார் அழைத்துச் சென்று விசாரணையை மேற்கொண்டுள்ளார்.சினிமா காட்சிபோல் இந்த சம்பவம் நடந்தது இப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →