முகப்பு
தற்போதைய செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக நால்வர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள வி.முத்துலிங்காபுரத்தைச் சேர்ந்தவர் பவுண்ராஜ். இவரது 15 வயது மகள், கடைக்குச் சென்றுவிட்டு பள்ளிக்கூடம் அருகே வந்து கொண்டிருந்துள்ளார். அப்போது இரு இரு சக்கர

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:04 PM
பகிர்:

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக நால்வரை போலீஸார் கைது செய்தனர். மேலும் ஒருவரைத் தேடி வருகிறார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள வி.முத்துலிங்காபுரத்தைச் சேர்ந்தவர் பவுண்ராஜ். இவரது 15 வயது மகள், கடைக்குச் சென்றுவிட்டு பள்ளிக்கூடம் அருகே வந்து கொண்டிருந்துள்ளார். அப்போது இரு இரு சக்கர வாகனத்தில் 5 பேர் வந்துள்ளார்கள். இதில் கூனம்பட்டியைச் சேர்ந்த பாண்டி மகன் பாண்டிமுருகன் (23) மற்றும் தர்மர் மகன் அயல்ராஜா (23) ஆகியோர் அந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். இதற்கு மற்ற மூவரும் உடந்தையாக இருந்துள்ளனர்.

 இது குறித்து சிறுமி கிருஷ்ணன்கோவில் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து பாண்டிமுருகன், அயல்ராஜா, முருகன் மகன் ரவிக்குமார் (22), பால்சாமி மகன் கண்ணதாசன் (23) ஆகியோரைக் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள பரமசிவம் என்பவரைத் தேடி வருகிறார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →