முகப்பு
தற்போதைய செய்திகள்

அரசு பேருந்து மோதி பொறியியல் கல்லூரி மாணவர் சாவு

கரூர் அண்ணாநகரைச் சேர்ந்தவர் துரைசாமி. இவரது மகன் சுஷேந்திரன்(25). இவர் திருச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ. படித்து வந்தார். இந்நிலையில் புதன்கிழமை காலை தனது

Updated On : 3 டிசம்பர், 2013 at 4:47 PM
பகிர்:

கரூரில் அரசு பேருந்து மோதி புதன்கிழமை பொறியியல் கல்லூரி மாணவர் இறந்தார்.

கரூர் அண்ணாநகரைச் சேர்ந்தவர் துரைசாமி. இவரது மகன் சுஷேந்திரன்(25). இவர் திருச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ. படித்து வந்தார். இந்நிலையில் புதன்கிழமை காலை தனது பைக்கில் அப்பாவை, கரூர் பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டு கோவை சாலையில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல் போடச் சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து கோவை சாலையில் வந்தபோது எதிரே வந்த அரசு பேருந்து பைக் மீது மோதியது. இதில் சுஷேந்திரன் சம்பவ இடத்திலே இறந்தார். இதுகுறித்து கரூர் நகர காவல்நிலையத்தினர் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.