முகப்பு
தற்போதைய செய்திகள்

இடிந்து விழும் நிலையில் உள்ள நகராட்சி பள்ளி கட்டடத்தை ஆய்வு செய்த கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ

சிதம்பரம் வடக்குவீதி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் உள்ள இடிந்து விழும் நிலையில் உள்ள பழுதடைந்த கட்டடத்தை மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:08 PM
பகிர்:

சிதம்பரம் வடக்குவீதி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் உள்ள இடிந்து விழும் நிலையில் உள்ள பழுதடைந்த கட்டடத்தை மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

 நகராட்சி நடுநிலைப்பள்ளி கட்டடம் கட்டப்பட்டு 100 ஆண்டுகள் ஆகிறது. தற்போது பள்ளி கட்டடம் மற்றும் மேல்கூரை இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை தகவல் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் மேற்கண்ட பள்ளியை சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் கட்டடம் பழுதுள்ளது குறித்து தலைமை ஆசிரியையிடம் விபரங்களை கேட்டறிந்தார்.

புதிய கட்டடம் கட்டுவது குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ தலைமை ஆசிரியரிடம் தெரிவித்தார். ஆய்வின் போது எம்எல்ஏவுடன் மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி நகரச் செயலாளர் ஆர்.ராமச்சந்திரன், மாவட்டக்குழு உறுப்பினர் பி.கற்பனைச்செல்வம் ஆகியோர் உடன் சென்றனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments