ஹைட்ரஜன் ஆற்றல் மூலம் மின்தேவையை சரி செய்ய ஆய்வுகள்: பேராசிரியர் சி.என்.ஆர்.ராவ்
நவீன யுகத்தில் மின்சார தேவை அதிகமாக இருப்பதால், எதிர்கால தேவையைக் கருத்தில் கொண்டு சூரிய ஆற்றல் மற்றும் ஹைட்ரஜன் ஆற்றல் மூலம் அதிக மின் தேவையை சரிசெய்ய ஆய்வுகள் நடத்தப்படுகிறது
தற்போதைய செய்திகள்ஹைட்ரஜன் ஆற்றல் மூலம் மின்தேவையை சரி செய்ய ஆய்வுகள்: பேராசிரியர் சி.என்.ஆர்.ராவ்
நவீன யுகத்தில் மின்சார தேவை அதிகமாக இருப்பதால், எதிர்கால தேவையைக் கருத்தில் கொண்டு சூரிய ஆற்றல் மற்றும் ஹைட்ரஜன் ஆற்றல் மூலம் அதிக மின் தேவையை சரிசெய்ய ஆய்வுகள் நடத்தப்படுகிறது
நவீன யுகத்தில் மின்சார தேவை அதிகமாக இருப்பதால், எதிர்கால தேவையைக் கருத்தில் கொண்டு சூரிய ஆற்றல் மற்றும் ஹைட்ரஜன் ஆற்றல் மூலம் அதிக மின் தேவையை சரிசெய்ய ஆய்வுகள் நடத்தப்படுகிறது என்று பாரதரத்னா விருது பெறவுள்ள பெங்களூரு பேராசிரியர் சி.என்.ஆர்.ராவ் கூறினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர், குருஞான சம்பந்தர் இந்து மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை மாணவர்களுக்கான அறிவியல் கருத்தரங்கு பள்ளிச் செயலர் டி.ஏ.எஸ்.ராமஸ்வாமி தலைமையில் நடைபெற்றது. இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பச் செயலாளர் டாக்டர் டி.ராமசாமி வரவேற்றார்.சிறப்பு விருந்தினராக இந்திய அரசின் பாரத ரத்னா விருது பெறவுள்ள பெங்களூரு பேராசிரியர் சி.என்.ஆர்.ராவ் கலந்து கொண்டு கருத்துரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
நவீன யுகத்தில் டங்ஸ்டன் இழைகளின் மூலமாக பல்புகள் CFL (nano) பல்புகள் பயன்படுத்தப்படுவதால் ஆற்றலை சேமிக்கலாம். இது பல காலம் உழைக்கும் தன்மை பெற்றுள்ளது. கிராபைட்டின் மேல்பரப்பிலுள்ள கார்பன் வேதியியலின் ஒரு மைல்கல் ஆகும். அதிக காலம் (100 ஆண்டுகள்) மின்சார பல்புகள் தயாரிப்பில் இது புது சாதனையை எட்டியுள்ளது.
கார்பனின் புது புறவேற்றுமை வடிவங்கள் 1985-ல் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் கார்பன்-60, கார்பன்-70 அணுக்கள் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இது நவீன யுகத்தில் அதி மின் கடத்தியாக (Super Conductor) செயல்படுகிறது. இதன் ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டிருக்கிறது.நானோ கெமிஸ்ட்ரி மூலம் பல அரிய கண்டுபிடுப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மின்சார தேவை அதிகமாக இருப்பதால் எதிர்காலத்தில் சூரிய ஆற்றல், ஹைட்ரஜன் ஆற்றல் ஆகியவை மூலமாக அதிக மின்தேவையை சரிசெய்ய ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.
வேதியியல் 1800 ஆண்டுகளுக்கு முன்னர் அறியப்பட்டது. முதலாம் நூற்றாண்டில் 7 தனிமங்களும், 10-ம் நூற்றாண்டில் 10 தனிமங்களும், 16-ம் நூற்றாண்டில் 23 தனிமங்களும், 19-ம் நூற்றாண்டில் 114 தனிமங்களும் கண்டறியப்பட்டது. தற்போது 120 தனிமங்கள் கண்டறியப்பட்டுள்ளது. ஒவ்வொரு காலகட்டத்திலும் பல வேதியியலாளர்கள் பல அரிய கண்டுபிடிப்புகளைக் கண்டறிந்து நோபல் பரிசு பெற்றுள்ளார்கள்.
மாணவர்களுக்கு பள்ளிப் பருவத்திலேயே ஆராய்ச்சி மனப்பான்மை அவசியம் தேவை. மாணவர்கள் சிறந்த அறிவியல் அறிஞர்களாக, ஆராய்ச்சியாளர்களாக உருவாகி இந்தியாவிற்கு சேவை செய்ய வேண்டும். இதற்கு ஆசிரியர்கள் மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்றார் அவர்.
முன்னதாக பள்ளி வளாகத்தில் புதியதாகக் கட்டப்பட்டுள்ள டி.திருமலாச்சாரியார் அறிவியல் அரங்கத்தை அவர் திறந்து வைத்தார்.நிகழ்ச்சியில் கலசலிங்கம் பல்கலைக்கழக பதிவாளர் டாக்டர் வெ.வாசுதேவன், ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் பி.வெள்ளைச்சாமி, ஆசிரியர்கள் மற்றும் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.பள்ளித் தலைமை ஆசிரியர் கே.ஆறுமுகப்பெருமாள் நன்றி கூறினார்.