தற்போதைய செய்திகள்

அமைதி பேச்சுவார்த்தையினால் சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலக முற்றுகை போராட்டம் வாபஸ்!

சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு புதன்கிழமை நடைபெற இருந்த முற்றுகை போராட்டம் அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் ஏற்பட்ட முடிவால் வாபஸ் பெறப்பட்டது.

G.Sundararaj

சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு புதன்கிழமை நடைபெற இருந்த முற்றுகை போராட்டம் அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் ஏற்பட்ட முடிவால் வாபஸ் பெறப்பட்டது.

சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் முறைகேடுகளை கண்டித்து டிச.11-ம் தேதி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவது என மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி அறிவித்திருந்தது. இதனை அடுத்து சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவிஆட்சியர் எம்.அரவிந்த் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் வட்டாட்சியர் எம்.விஜயா, மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி நகரச் செயலாளர் ஆர்.ராமச்சந்திரன், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, பி.கற்பனைச்செல்வம், சி.வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் ஏற்பட்ட முடிவுகளினால் புதன்கிழனமை நடைபெற இருந்த முற்றுகை போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

கூட்டத்தில், புதிய குடும்ப அட்டை பெறுதல், இதர குடும்ப அட்டை தொடர்பான பணிகள் குறித்து பொதுமக்களுக்கு தகவல் பலகை வைப்பது, குடும்ப அடை பணி தொடர்பாக புரோக்கர்களை தவிர்த்து குடும்ப அட்டைதாரர்களே நேரடியாக அலுவலகத்திற்கு வந்து மனுவினை வழங்க வேண்டும், புதிதாக குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்தவர்களுக்கு தகுதி இருப்பின் 60 நாட்களுக்குள் புதிய குடும்ப அட்டை பெற்று வழங்கப்படும், சமூகபாதுகாப்பு திட்ட பயனாளிகள் தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பம் கொடுத்தால் ஒப்புகை ரசீது வழங்குவது, மூன்றாவது நபர் மூலம் விண்ணப்பம் பெறுவதை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

வங்கதேசத்தில் இந்திய தூதரகம், தூதர் வீட்டின் மீது கல்வீச்சு!

திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.1.20 கோடி மதிப்புள்ள பிளேடுகள் நன்கொடை!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் விடியவிடிய தர்னா!

SCROLL FOR NEXT