முகப்பு
தற்போதைய செய்திகள்

அனுமதியின்றி மதுக்கூடம் நடத்திய 8 பேர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனுமதியின்றி மதுக்கூடம் நடத்தியதாக பெண் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டதாக டாஸ்மாக் மாவட்ட மேலாளர் எஸ். பியோ தங்கதுரை தெரிவித்தார்.இதுகுறித்து அவர்

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:12 PM
பகிர்:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனுமதியின்றி மதுக்கூடம் நடத்தியதாக பெண் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டதாக டாஸ்மாக் மாவட்ட மேலாளர் எஸ். பியோ தங்கதுரை தெரிவித்தார்.இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கலால் துறையின் உதவி ஆணையர் கே.மல்லிகா, டாஸ்மாக் துறையினர், மதுவிலக்கு போலீஸôர் ஆகியோர் ஒருங்கிணைந்து திங்கள்கிழமை கூட்டுத் தணிக்கையில் ஈடுபட்டனர். இதில் அரசு மதுபானக் கடைகளுக்கு அருகில் அனுமதியின்றி கள்ளத்தனமாக மதுக் கூடங்கள் நடத்துவது தெரியவந்தது.

இது தொடர்பாக பர்கூரைச் சேர்ந்த வேலு, குரும்பட்டியைச் சேர்ந்த முருகன் (60), சின்ன குழந்தை (53), கும்மனூர் முனியப்பன் (32), பீமாண்டப்பள்ளி முரளி (20), திப்பனபள்ளி லோகேஷ் (28), பல்வேரிப்பள்ளி சிவக்குமார் (25), ஆலப்பட்டி முனியம்மாள் (44) ஆகியோரை கைது செய்யப்பட்டு மதுவிலக்கு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →