முகப்பு
தற்போதைய செய்திகள்

நாகையில் கடல் சீற்றம்: பைபர் படகு கடலில் கவிழ்ந்த விபத்தில் ஒரு மீனவர் பலி

கடல் சீற்றம் காரணமாக, நாகை அருகே ஒரு மீன்பிடி பைபர் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மீனவர் ஒருவர் வியாழக்கிழமை உயிரிழந்தார். மாதி புயல் காரணமாக நாகை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கடல் சீற்றம் அதிகரித்துள்ளது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:13 PM
பகிர்:

கடல் சீற்றம் காரணமாக, நாகை அருகே ஒரு மீன்பிடி பைபர் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மீனவர் ஒருவர் வியாழக்கிழமை உயிரிழந்தார். மாதி புயல் காரணமாக நாகை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கடல் சீற்றம் அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக, நாகை மாவட்டத்தில் பைபர் படகு மூலமான மீன்பிடித் தொழில் முடக்கமடைந்துள்ளது. இந்த நிலையில், நாகை அருகே உள்ள சாமந்தான்பேட்டையைச் சேர்ந்த பரமசிவம்(34),  தவமணி(40), பிரதீப்(20), மாணிக்கம்(21) ஆகியோர் பரமசிவத்துக்குச் சொந்தமான பைபர் படகில் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். கரையிலிருந்து சுமார் 500 மீட்டர் தூரம் சென்ற நிலையில், கடல் சீற்றம் காரணமாக அந்த மீன்பிடி பைபர் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், மீனவர் தவமணி கடலில் மூழ்கி உயிரிழந்தார்.  மற்ற மீனவர்கள் 3 பேரும் நீந்தி கரையேறினர்.

படகு விபத்துக்குள்ளான போது பரமசிவத்துக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடலில் மூழ்கி உயிரிழந்த தவமணியின் சடலம் சாமந்தான்பேட்டை அருகே வியாழக்கிழமை காலை கரை ஒதுங்கியது.  நாகை கடலோரக் காவல் படை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →