மதுராந்தகம் அருகே ரயில் தண்டவாளத்தில் விரிச்சல்: தென்னக இரயில்கள் 2மணி நேரம் காலதாமதம்
மதுராந்தகம் அருகே மேல்மருவத்தூர் -- அச்சிறுப்பாக்கம் இடையே செல்லும் இரயில் தண்டவாளத்தில் திங்கட்கிழமை காலை 3 இடங்களில் ஏற்பட்ட விரிச்சலால் தென்னகத்திலிருந்து வந்த
மதுராந்தகம் அருகே மேல்மருவத்தூர் -- அச்சிறுப்பாக்கம் இடையே செல்லும் இரயில் தண்டவாளத்தில் திங்கட்கிழமை காலை 3 இடங்களில் ஏற்பட்ட விரிச்சலால் தென்னகத்திலிருந்து வந்த இரயில்கள் 2 மணி நேர காலதாமதமாக சென்னை நோக்கி வந்தன.
மதுராந்தகம் அருகே மேல்மருவத்தூர் -- அச்சிறுப்பாக்கம் இடையே செல்லும் இரயில் தண்டவாளத்தில் 2 இடங்களிலும், அச்சிறுப்பாக்கம் -- திண்டிவனம் செல்லும் வழியில் அறப்பேடு என்ற இடத்திலும் ஆக 3 இடங்களில் ஏற்பட்ட விரிச்சல் இருந்தது. வழக்கம் போல இரயில் தண்டவாளப்பகுதியை சரிபார்க்கும் ஊழியர்கள் இன்று காலை அந்த வழியாக வந்தபோது தண்டவாளத்தில விரிச்சல்கள் ஏற்பட்டு இருந்ததை கண்டுபிடித்து மேல்மருவத்தூர், அச்சிறுப்பாக்கம் ஆகிய ரயில்நிலையங்களுக்கு தகவலை அளித்தனர்.
பின்னர் செங்கல்பட்டு ரயில்வே பாதுகாப்பு பிரிவினரும், தண்டவாளப்பகுதியை சரிபார்க்கும் ஊழியர்களும் விரைந்து செயல்பட்டு விரிச்சல் பகுதியை சரி செய்தனர். இதனால் சென்னை நோக்கி வநத அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில், முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில், பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் உள்ளிட்ட 4 ரயில்கள் 2 மணி நேரம் காலதாமதமாக சென்னை நோக்கி வந்தன. தண்டவாளப்பகுதியை சரிபார்க்கும் ஊழியர்களின் விழிப்புணர்ச்சியால் பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது.
Advertisement