முகப்பு
தற்போதைய செய்திகள்

டிச.28-ம் தேதி காங்கிரஸ் கட்சி முப்பெரும்விழாவாக கொண்டாடப்படும்: பொதுச்செயலாளர் எஸ்.ஜெயச்சந்திரன்

கடலூர் மாவட்டம் முழுவதும் டிசம்பர் 28-ம் தேதி அன்று காங்கிரஸ் கட்சி 129வது ஆண்டு தொடக்கவிழா, சோனியாகாந்தி பிறந்தநாள் விழா, ஜி.கே.வாசன் பிறந்தநாள் விழா ஆகிய முப்பெரும்விழாவாக

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:21 PM
பகிர்:

கடலூர் மாவட்டம் முழுவதும் டிசம்பர் 28-ம் தேதி அன்று காங்கிரஸ் கட்சி 129வது ஆண்டு தொடக்கவிழா, சோனியாகாந்தி பிறந்தநாள் விழா, ஜி.கே.வாசன் பிறந்தநாள் விழா ஆகிய முப்பெரும்விழாவாக கொண்டாடப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் எஸ்.ஜெயச்சந்திரன் தெரிவித்தார்.

சிதம்பரத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாநில பொதுச்செயலாளர் எஸ்.ஜெயச்சந்திரன், மாவட்டத் தலைவர் எஸ்.புரட்சிமணி ஆகியோரின் அறிமுகக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மூப்பனார் பேரவைத் தலைவர் ஆர்.மக்கீன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் ஜெமினி எம்.என்.ராதா, மாவட்ட பேரவைத் தலைவர் எஸ்.கே.வைத்தி, ராஜா.சம்பத்குமார், வாசன் பேரவைத் தலைவர் கோ.குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் எஸ்.ஜெயச்சந்திரன் பங்கேற்று பேசுகையில்   வருகிற டிச.28-ம் தேதி காங்கிரஸ் கட்சி முப்பெரும் விழாவாக மாவட்டம் முழுவதும் கொண்டாடவுள்ளது என்றார். கடலூர் தெற்கு மாவட்டத் தலைவர் எஸ்.புரட்சிமணி பேசுகையில் கடலூர் தெற்கு மாவட்டத்திற்கு விரைவில் மாவட்ட, வட்டார, நகர நிர்வாகிகள் நியமிக்கப்படவுள்ளனர். மேலும் காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல்காந்தி கட்டளையின்படி 2 மாதத்திற்கு ஒரு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டமும், நகர நிர்வாகிகள் செயல்வீரர்கள் கூட்டமும் நடத்தப்படும். கூட்டத்தில் பொதுமக்களின் பிரச்சனைகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்றார்.

கூட்டத்தில் முன்னாள் மாவட்டத் தலைவர் ஆர்.சச்சிதானந்தம், நகர காங்கிரஸ் கமி்ட்டித் தலைவர் வழக்குரைஞர் ஏ.எஸ்.வேல்முருகன், மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் பி.பி.கே.சித்தார்த்தன், சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் கே.ரஜினிகாந்த், மாவட்ட பொதுச்செயலாளர் கே.நாகராஜ், ஆர்.வி.சின்ராஜ், கட்டாரி சந்திரசேகன், சம்பந்தமூர்த்தி, மாணவர் காங்கிரஸ் தலைவர் மணிகண்டன், மகளிரணி நிர்வாகிகள் தில்லைசெல்வி, சந்தானமேரி, ராஜலட்சுமி, மீனா, பூமா உள்ளிட்டோர் பங்கேற்றனர். நகர்த தலைவர் வழக்குரைஞர் ஏ.எஸ்.வேல்முருகன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.