கொல்கத்தாவில் 13 வயது சிறுமி பலாத்காரம்: ஒருவர் கைது
கொல்கத்தாவில் உள்ள பார்க் தெருவில் கடந்த ஞாயிறு அன்று கால் டாக்சியில் பின்புறம் வைத்து 13 வயது சிறுமியை மர்ம நபர் ஒருவர் பலாத்காரம் செய்தார். இச்சம்பவம் குறித்து விசாரணை
கொல்கத்தாவில் உள்ள பார்க் தெருவில் கடந்த ஞாயிறு அன்று கால் டாக்சியில் பின்புறம் வைத்து 13 வயது சிறுமியை மர்ம நபர் ஒருவர் பலாத்காரம் செய்தார். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீஸார் அவரை கைது செய்துள்ளனர்.
இச்சம்பவத்தில் தொடர்புடைய கால் டாக்சி டிரைவரை போலீஸார் தேடிவருகின்றனர். கடந்த பிப்ரவரி 2012 ஆம் ஆண்டு வெளிநாட்டு பெண்ணை பார்க் தெருவில் வைத்து மர்மகும்பல் ஒன்று கொடூரமாக பலாத்காரம் செய்திருந்த நிலையில் தற்போது அதே பகுதியில் மற்றொரு கொடூர சம்பவம் நடத்துள்ளது குறிப்பிடத்தக்கது.