முகப்பு
தற்போதைய செய்திகள்

நெல் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரம் வழங்கக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

காட்டுமன்னார்கோயிலில் நெல் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரம் விலை வழங்கக் கோரி திங்கள்கிழமை ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் ஊர்வலமாக சென்று வட்டாட்சியர் அலுவலகம் முன்பு

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:30 PM
பகிர்:

காட்டுமன்னார்கோயிலில் நெல் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரம் விலை வழங்கக் கோரி திங்கள்கிழமை ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் ஊர்வலமாக சென்று வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொள்ளிடம் கீழனை பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் நெல் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் சங்கத் தலைவர் பி.விநாயகமூர்த்தி தலைமையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பஸ் நிலையத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். முக்கிய வீதிகள் வழியாக வட்டாட்சியர் அலுவலகத்தை அடைந்து அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு தலைவர் பி.விநாயகமூர்த்தி தலைமை வகித்தார்.

விவசாயிகள் எம்.அன்பழகன், குருங்குடி எம்.பாரதி, பி.லட்சுமிகாந்தன், எஸ்.கவிசந்திரன், கலியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்.மணிவண்ணன், அப்துல்வதூது, எம்.ஆர்.பாலு, ஏ.வி.ஆர்.பழனிராஜா, ஆசைதம்பி உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.