காட்டுமன்னார்கோயில் அருகே மயங்கிய நிலையில் கிடந்த மயில் மீட்பு!
காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள ஆச்சாள்புரம் கிராமத்தில் மயில் ஒன்று மயங்கிய நிலையில் கிடப்பதாக திங்கள்கிழமை அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே மயங்கிய நிலையில் கிடந்த மயிலை வனத்துறை மீட்டு சிகிச்சை அளித்து காட்டுப்பகுதியில் விட்டனர்.
காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள ஆச்சாள்புரம் கிராமத்தில் மயில் ஒன்று மயங்கிய நிலையில் கிடப்பதாக திங்கள்கிழமை அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த வனக்காப்பாளர்கள் எம்.ராஜேஷ்குமார், டி.பழனிவேல் ஆகியோர் சென்று மயிங்கி கிடந்த மயிலை மீட்டு பாதுகாப்பாக வைத்திருந்து சிகிச்சை அளித்து மயில்கள் அதிகம் வாழும் காட்டுப்பகுதியில் விட்டனர்.