முகப்பு
தற்போதைய செய்திகள்

நெல்லை அருகே மின்சாரம் பாய்ந்து பொறியியல் மாணவர் சாவு

திருநெல்வேலி அருகே தாழையூத்து செந்தில்நகரை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் ஆறுமுகம் (20). பொறியியல் பயின்று வந்தார். ராமகிருஷ்ணன் அங்கு புதிதாக வீடு கட்டி வருகிறார். செவ்வாய்க்கிழமை

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:31 PM
பகிர்:

திருநெல்வேலி அருகே கட்டடத்துக்கு தண்ணீர் நனைக்கும்போது மின்சாரம் பாய்ந்து பொறியியல் பயிலும் மாணவர் இறந்தார்.

திருநெல்வேலி அருகே தாழையூத்து செந்தில்நகரை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் ஆறுமுகம் (20). பொறியியல் பயின்று வந்தார். ராமகிருஷ்ணன் அங்கு புதிதாக வீடு கட்டி வருகிறார். செவ்வாய்க்கிழமை வழக்கம்போல், ஆறுமுகம் கட்டடத்துக்கு தண்ணீர் நனைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது மின்மோட்டார் சுவிட்சை ஆறுமுகம் போட்டபோது, எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதில் சம்பவ இடத்திலே ஆறுமுகம் இறந்தார். தாழையூத்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.

முழு கட்டுரையைப் படிக்க →