ரூ.4 லட்சம் கையாடல் செய்த ஆதிதிராவிட நலத்துறை அலுவலக உதவியாளர் தற்காலிக பணிநீக்கம்
சிதம்பரம் உதவிஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆதிதிராவிட நலத்துறை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திலிருந்து சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் உள்ள ஆதிதிராவிடப்பள்ளி
ஆசிரியர்கள் ஊதியத்தொகை ரூ.4 லட்சத்தை கையாடல் செய்த ஆதிதிராவிட நலத்துறை அலுவலக இளநிலை உதவியாளர் ஒருவர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சிதம்பரம் உதவிஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆதிதிராவிட நலத்துறை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திலிருந்து சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் உள்ள ஆதிதிராவிடப்பள்ளி ஆசிரியர்கள், விடுதி அலுவலர்கள், ஊழியர்களுக்கு மாத ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்கள் ஆசிரியர்கள் சிலருக்கு தனது வங்கி கணக்கில் ஊதியம் வராமல் இருந்தது. இதுகுறித்து கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.
ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மோகனசுந்தரம் உத்தரவின் பேரில் வருவாய்த்துறையினர் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் கீரப்பாளையத்தைச் சேர்ந்த இளநிலை உதவியாளர் விமல் (35) என்பவர் மேற்கண்ட ஆசிரியர்களின் ஊதியத்தொகை ரூ.4 லட்சத்தை தனது கணக்கில் வரவு வைத்துள்ளது தெரியவந்தது. இதனையடுத்து துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு இளநிலை உதவியாளர் விமலை ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மோகனசுந்தரம் தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.