காதல் திருமணம் செய்த பெண்ணிடம் நகை, பணம் கேட்டு மிரட்டல்: கணவர் உள்ளிட்ட மூவர் மீது வழக்கு
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கூனம்பட்டி, மேலத்தெருவைச் சேர்ந்தவர் கீதா (23). இவருக்கும் இதே ஊர் கிழக்குத் தெருவைச் சேர்ந்த மு.ஜெபமணி மகன் முத்துச்செல்வம் (31)
தற்போதைய செய்திகள்காதல் திருமணம் செய்த பெண்ணிடம் நகை, பணம் கேட்டு மிரட்டல்: கணவர் உள்ளிட்ட மூவர் மீது வழக்கு
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கூனம்பட்டி, மேலத்தெருவைச் சேர்ந்தவர் கீதா (23). இவருக்கும் இதே ஊர் கிழக்குத் தெருவைச் சேர்ந்த மு.ஜெபமணி மகன் முத்துச்செல்வம் (31)
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட பெண்ணிடம், நகை, பணம் வரதட்சிணையாக கேட்டு மிரட்டிய கணவர் மற்றும் மாமனார், மாமியார் மீது போலீஸார் இன்று வழக்குப் பதிவு செய்து அவர்களைத் தேடி வருகிறார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கூனம்பட்டி, மேலத்தெருவைச் சேர்ந்தவர் கீதா (23). இவருக்கும் இதே ஊர் கிழக்குத் தெருவைச் சேர்ந்த மு.ஜெபமணி மகன் முத்துச்செல்வம் (31) என்பவரும் 4 ஆண்டுகளுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது ஒன்னறை வயதில் பெண் குழந்தை உண்டு. திருணத்தின் போது கீதா நகை ஏதும் போட்டு வரவில்லையாம்.
தற்போது அதிக வரதட்சிணையாக நகை மற்றும் பணம் கேட்டு கணவர் முத்துச்செல்வம், மாமனார் மு.ஜெபமணி (58), மாமியார் பாக்கியலட்சுமி (51) ஆகியோர் கீதாவை துன்புறுத்தினார்களாம்.இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 2-ல் கீதா மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி, ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட்டார். அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மூவரையும் தேடி வருகிறார்கள்.