முகப்பு
தற்போதைய செய்திகள்

திருட்டு மதுபான விற்பனை சோதனைக்குச் சென்ற காவல் ஆய்வாளர் மீது வழக்கு

வத்திராயிருப்பு அருகேயுள்ள கோட்டையூரில் சின்னத்தம்பி மகன் ஆசைத்தம்பி என்பவர் வீட்டில் திருட்டுத்தனமாக மதுபான பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக வெள்ளிக்கிழமை இரவு வத்திராயிருப்பு காவல் சார்பு ஆய்வாளர் கருப்பசாமி பாண்டியனுக்கு கோட்டையூர் ஊராட்சி தலைவர் முருகன் செல்போனில் தகவல் கொடுத்துள்ளார்

தற்போதைய செய்திகள்

திருட்டு மதுபான விற்பனை சோதனைக்குச் சென்ற காவல் ஆய்வாளர் மீது வழக்கு

வத்திராயிருப்பு அருகேயுள்ள கோட்டையூரில் சின்னத்தம்பி மகன் ஆசைத்தம்பி என்பவர் வீட்டில் திருட்டுத்தனமாக மதுபான பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக வெள்ளிக்கிழமை இரவு வத்திராயிருப்பு காவல் சார்பு ஆய்வாளர் கருப்பசாமி பாண்டியனுக்கு கோட்டையூர் ஊராட்சி தலைவர் முருகன் செல்போனில் தகவல் கொடுத்துள்ளார்

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:17 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருட்டுத்தனமாக வீட்டில் மதுபான விற்பனை நடைபெறுவதாக வந்த புகாரின் பேரில் சோதனைக்குச் சென்றதில் ஏற்பட்ட மோதலில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட நால்வர் காயம் அடைந்தனர். தற்போது ஒரு நபர் தன்னை காவல் சார்பு ஆய்வாளர் உருட்டுக்கட்டையால் தாக்கியதாக கொடுத்த புகாரின் பேரில் காவல் சார்பு ஆய்வாளர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

வத்திராயிருப்பு அருகேயுள்ள கோட்டையூரில் சின்னத்தம்பி மகன் ஆசைத்தம்பி என்பவர் வீட்டில் திருட்டுத்தனமாக மதுபான பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக வெள்ளிக்கிழமை இரவு வத்திராயிருப்பு காவல் சார்பு ஆய்வாளர் கருப்பசாமி பாண்டியனுக்கு கோட்டையூர் ஊராட்சி தலைவர் முருகன் செல்போனில் தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து சார்பு ஆய்வாளர் கருப்பசாமி பாண்டின் ஒரு காவலருடன் கோட்டையூர் சென்று குறிப்பிட்ட வீட்டில் சோதனையிட்டுள்ளார். அங்கு மதுபான பாட்டில்கள் ஏதும் கிடைக்கவில்லை. இதனையடுத்து போலீஸார் வெளியே வந்துள்ளனர். அப்போது ஆசைத்தம்பி மற்றும் அவரது மனைவி பூமலர் ஆகியோர் எங்கள் வீட்டில் மதுபான பாட்டில் விற்பனை நடைபெறுவதாய் யார் கூறினார்கள்? என்று கேட்டுள்ளனர். அதற்கு போலீஸார் உங்கள் ஊர் தலைவரைப் போய் கேளுங்கள் என்று கூறிவிட்டு காவல் நிலையம் சென்றுள்ளனர்.இதனையடுத்து ஆசைத்தம்பியின் உறவினர்கள் ஏராளமானோர், கோட்டையூர் ஊராட்சி தலைவர் முருகன் வீட்டிற்குச் சென்று தகராறு செய்துள்ளனர். அவர் போன் மூலம் தகவல் சொன்னதை மறுத்துள்ளார். அப்படியானால் சார்பு ஆய்வாளர் கருப்பசாமி பாண்டியை ஊருக்கு நேரில் வரச்சொல்லி, நீங்கள் சொல்லவில்லை என்று சொல்ல வேண்டும். இல்லையென்றால் ஊரில் குடியிருக்க முடியாது என்று கூறி மிரட்டியுள்ளனர்.

இதனையடுத்து முருகன் உடனடியாக வத்திராயிருப்பு காவல் நிலையம் சென்று நடந்ததைக் கூறியுள்ளார்.உடனே காவல் ஆய்வாளர் ஏ.டி.சக்கரவர்த்தி, சார்பு ஆய்வாளர் கருப்பசாமி பாண்டியன், சிறப்பு சார்பு ஆய்வாளர் விநாயகமூர்த்தி, காவலர் சீனிவாசன் ஆகியோர் போலீஸ் ஜீப்பில் கோட்டையூர் சென்றுள்ளனர். அங்கு ஏற்கனவே திட்டமிட்டு சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கற்கள், கம்புகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் திரண்டிருந்துள்ளர். போலீஸ் ஜீப் போய் கோட்டையூர் மந்தை அருகே நின்றுவுடன் மின்சாரம் தடைபட்டுள்ளது. ஜீப்பில் இருந்து இறங்கிய ஆய்வாளர் சக்கரவத்தியிடம், மண், மணல் அள்ளி தொழில் செய்ய முடியபடி கடுமையான நடவடிக்கை எடுக்கும் உங்கள் இருவரையும் கொன்றால்தான் நிம்மதியாக தொழில் செய்ய முடியும் என்று கூறி சரமாரியாக கம்பு, கற்களால் அவரை தாக்கியுள்ளனர். இதில் சக்கரவர்த்திக்கு தலை உள்ளிட்ட உடலின் பல்வேறு இடங்களில் பலத்த ரத்தக் காயம் ஏற்பட்டது. இது நடந்து கொண்டிருந்த நேரம் ஒரு கும்பல் சார்பு ஆய்வாளர் கருப்பசாமி பாண்டியனை தனியே தூக்கிச் சென்று பயங்கரமாக தாக்கியுள்ளது. மேலும் கல்விச்சில் சிறப்பு சார்பு ஆய்வாளர் விநாயகமூர்த்தி மற்றும் காவலர் சீனிவாசனும் காயம் அடைந்தனர். போலீஸ் ஜீப்பையும் கும்பல் தாக்கி சேதப்படுத்தியது.

இது குறித்து காவல் ஆய்வாளர் ஏ.டி.சக்கரவர்த்தி, வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சின்னக்கருப்பன் மகன் ஆசைத்தம்பி, சண்டியர் குருவையா, பெருமாள் மகன் மாரிமுத்து, சுப்பையா மகன் முருகன், செல்வராஜ் மகன் ஆசைத்தம்பி, சின்னக்கருப்பன் மகன், ஆசைத்தம்பியின் உறவினர்கள் சுமார் 60 பேர் மீது வழக்குப் பதிவு செய்து மூவரை கைது செய்தனர்.இதன் தொடர்ச்சியாக, கோட்டையூர், தெற்குத் தெரு வீரணன் மகன் குருவையா (40) என்பவர் கோட்டையூர் மந்தை அருகே இருந்த போது தன்னை சார்பு ஆய்வாளர் கருப்பசாமிபாண்டியன் தலையில் உருட்டுக்கட்டையால் அடித்ததாக புகார் கொடுத்தார். இதன் பேரில் போலீஸார் சார்பு ஆய்வாளர் கருப்பசாமிபாண்டியன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதனிடையை இந்தப் பகுதியில் நடைபெற்ற சம்பவஙகள் குறித்து விசாரிக்கவும், பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறுவும் தமிழக மக்கள் முன்னேற்ற்க் கழக நிறுவனத் தலைவர் ஜான்பாண்டியன் இன்று வந்திருந்தார். தொடர்ந்து இப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →