முகப்பு
தற்போதைய செய்திகள்

மனைவியை கத்தியால் குத்தியவர் மீது வழக்கு

ராஜபாளையம், ஆவாரம்பட்டியைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் சண்முகவேல் (59), இவரது மனைவி ஜானகி (40) எஸ்.ராமச்சந்திரபுரம், நரிபாறை தெருவில் குடியிருந்து வருகிறார். இவர்கள் இருவரும் 17 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கிறார்கள். ஜானகி, முதலமைச்சர் நிவாரண திட்டத்தின் கீழ் வீடு ஒன்றை பெற்று, அதை ரூ.3 லட்சம்

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:17 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மனைவியை கத்தியால் குத்தியவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

ராஜபாளையம், ஆவாரம்பட்டியைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் சண்முகவேல் (59), இவரது மனைவி ஜானகி (40) எஸ்.ராமச்சந்திரபுரம், நரிபாறை தெருவில் குடியிருந்து வருகிறார். இவர்கள் இருவரும் 17 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கிறார்கள். ஜானகி, முதலமைச்சர் நிவாரண திட்டத்தின் கீழ் வீடு ஒன்றை பெற்று, அதை ரூ.3 லட்சம் செலவில் விரிவுபடுத்தியுள்ளார்.

இதனை கணவர் சண்முகவேல், மனைவி தவறான வழியில் பணம் சம்பாதித்து கட்டியதாகக் கருதி தகராறு செய்துள்ளார். தகராறு முற்றியநிலையில் வைத்திருந்த கத்தியால் மனைவி ஜானகியை குத்தியுள்ளார்.இது குறித்து ஜானகி, கிருஷ்ணன்கோவில் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சண்முகவேலை தேடி வருகிறார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →