முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீவிலி. காப்புக் காட்டில் பெண் யானைக்குட்டி மர்மச் சாவு

ஸ்ரீவில்லிபுத்தூர், ரெங்கர்கோயில் பீட், திருவண்ணாமலைக்கு பின்புறம் உள்ள தலையணைப் பாறை அருகே துர்நாற்றம் வீசியுள்ளது. இப் பகுதி அதிகமான யானைகள் நடமாட்டம் உள்ள பகுதியாகும். அங்கு இரு மலைகளுக்கு இடையேயுள்ள தண்ணீர் ஊற்றுள்ள பள்ளத்தில் யானைக் குட்டி ஒன்று உயிரிழந்து உருக்குலைந்த நிலையில் கிடந்துள்ளது.தகவல்

தற்போதைய செய்திகள்

ஸ்ரீவிலி. காப்புக் காட்டில் பெண் யானைக்குட்டி மர்மச் சாவு

ஸ்ரீவில்லிபுத்தூர், ரெங்கர்கோயில் பீட், திருவண்ணாமலைக்கு பின்புறம் உள்ள தலையணைப் பாறை அருகே துர்நாற்றம் வீசியுள்ளது. இப் பகுதி அதிகமான யானைகள் நடமாட்டம் உள்ள பகுதியாகும். அங்கு இரு மலைகளுக்கு இடையேயுள்ள தண்ணீர் ஊற்றுள்ள பள்ளத்தில் யானைக் குட்டி ஒன்று உயிரிழந்து உருக்குலைந்த நிலையில் கிடந்துள்ளது.தகவல்

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:17 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலையில் பெண் யானைக் குட்டி மர்மமான முறையில் இறந்து அழுகிய நிலையில் கிடந்தது  தெரியவந்தது.

ஸ்ரீவில்லிபுத்தூர், ரெங்கர்கோயில் பீட், திருவண்ணாமலைக்கு பின்புறம் உள்ள தலையணைப் பாறை அருகே துர்நாற்றம் வீசியுள்ளது. இப் பகுதி அதிகமான யானைகள் நடமாட்டம் உள்ள பகுதியாகும். அங்கு இரு மலைகளுக்கு இடையேயுள்ள தண்ணீர் ஊற்றுள்ள பள்ளத்தில் யானைக் குட்டி ஒன்று உயிரிழந்து உருக்குலைந்த நிலையில் கிடந்துள்ளது.தகவல் கிடைத்ததும் ஸ்ரீவில்லிபுத்தூர் வனச்சரகர் வேலுச்சாமி மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்ககுச் சென்றனர்.

மாவட்ட வன உயிரினக்காப்பாளர் அசோக்குமாரிடம் சம்பவ இடத்திற்குச் செல்வதற்காக, இது தொடர்பாக செய்தியாளர்கள் கேட்ட போது, வனத்துறையினர் போய் பார்த்து வந்த பின்னர் தெரிவிப்பார்கள் என்று கூறிவிட்டார். சம்பவம் பற்றி அறிந்து காலை 8 மணிக்கெல்லாம் மலைப் பகுதிக்கு செய்தியாளர்கள் மற்றும் தொலைக்காட்சியினர் சென்றனர். ஆனால் சம்பவ இடத்திற்கு செய்தியாளர்கள் வருவதை வனத்துறையினர் விரும்பாமல் இடத்தைக் கூற மறுத்துவிட்டனர். குறிப்பிட்ட ஒரு இடத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் வனச்சரகரின் டிரைவர் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அவரை பின் தொடர்ந்து செய்தியாளர்கள் சென்ற போது பாதை தெரியாதவர் போல் நடித்து சுமார் 1 மணி நேரம்  மலையில் சுற்றிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

இதனையடுத்து இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் வெ.பொன்னுப்பாண்டியிடம் செய்தியாளர்கள் முறையிட்டனர். அவர் உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம், வனத்துறையினர் தவறு செய்யாவிட்டால் வெளிப்படையாக செய்தியாளர்களை அழைத்துச் செல்ல வேண்டும் என்று பேசி செய்தியாளர்களை சம்பவ இடத்திற்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தார். இதனையடுத்து மீண்டு குறிப்பிட்ட இடத்திற்கு பாதை தெரியாதது போல் நடித்த வனச்சரகரின் ஜூப் டிரைவர் வந்து செய்தியாளர்களை சம்பவ இடத்திற்கு பகல் 1.30 மணிக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு யானைக் குட்டி முற்றிலும் உருக்குலைந்து அழுகிய நிலையில் நாற்றமெடுத்து கிடந்தது. அதனை பின்னர் வெளியே எடுத்த வனத்துறையினர் முறைப்படி தீ வைத்து எரியூட்டினர்.வனச்சரகர் வேலுச்சாமி கூறியதாவது: சுமார் ஒன்னறை மாதம் உள்ள பெண் யானைக் குட்டி இரு மலைகளுக்கு இடையே விழுந்து இறந்துவிட்டது என்றார்.

சட்டடப் பேரவை உறுப்பினர் வெ.பொன்னுப்பாண்டியன் கூறுகையில்: வனத்துறையினர் வன விலங்குகளுக்கு போதுமான தொட்டிகள் அமைத்து நீர் வைக்காத காரணத்தால், மலைக்கு கீழேயுள்ள தனியார் காடுகளுக்கு யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் வந்து சேதம் ஏற்படுத்தி தண்ணீர் குடித்துச் செல்கிறது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் வைத்த விஷத்தைத் தின்றுதான் இந்த யானைக்குட்டி உயிரிழந்துள்ளது. வனத்துறையினரின் செயல்பாடுகள் தொகுதியில் திருப்தி அளிப்பதாக இல்லை என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →